“சிறுசுக முதல் பெருசுக வரை லைக் பண்ணும் உருளைக்கிழங்கு சிப்ஸ்..!” – இப்படி செய்யுங்க..!!

 உருளைக்கிழங்கை விரும்பாதவர்களை இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு உருளைக்கிழங்குக்கு உலகளவில் மவுஸ் உள்ளது. உலகில் இருக்கும் மொத்த குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்குக்கு அடிமை என்று சொன்னாலும் மிகையாகாது.

 அப்படிப்பட்ட சுவையான நன்மைகளை தரக்கூடிய உருளைக்கிழங்கிலிருந்து உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரைகள் பார்க்கலாம்.

 உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

  1. நீளமான உருளைக்கிழங்கு 3
  2. அரை லிட்டர் எண்ணெய்

 மசாலா கலவைக்கு

3.கான் பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன்

4.உப்பு தேவையான அளவு

5.மிளகாய் தூள் தேவையான அளவு 6.நிறத்திற்காக சிறிது கேசரி பவுடர்

7.கரம் மசாலா அரை ஸ்பூன்

8.கருவேப்பிலை

செய்முறை

 முதலில் பெரிதாக இருக்கக்கூடிய உருளைக்கிழங்கு இருக்கக்கூடிய தோல்களை முழுமையாக நீக்க வேண்டும்.

 அதன் பிறகு பிங்கர் சிப்ஸ் வடிவத்திற்கு உருளைக்கிழங்கை நன்றாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ளுங்கள். அப்படி போடும்போது தான் கிழங்கு கருப்பு நிறம் அடையாது.

இதனை அடுத்து கிழங்கை நன்று நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியில் போட்டு அப்படியே பரப்பி விடவும்.

 அப்போது கிழங்கு இருக்கும் ஈரப்பதமானது காட்டன் துணியால் உறிஞ்சப்பட்டு விடும். இப்போது இந்த கிழங்கை ஒரு பௌலுக்குள் மாற்றிக் கொள்ளவும்.

 இதனை அடுத்து நீங்கள் மசாலா செய்ய வைத்திருக்கும் பொருட்களான கரம் மசாலா பொடி, மிளகாய் தூள், உப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து சிறிது சிறிதாக பௌலில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கின் மேல் போட்டு நன்கு கலக்கி விடவும்.

 இதனை நீங்கள் செய்யும் போதே அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து இளம் சூட்டில் சூடாக்கவும். பின் எண்ணெய் நன்கு கொதித்து வர ஹை ஃப்ளேமில் வைத்து விடுங்கள்.

 ஐந்து நிமிடம் கழித்து எண்ணெய் புகை மேலே கிளம்பி வர கூடிய சமயத்தில் நீங்கள் பிரட்டி வைத்திருக்கும் பிங்கர் சிப்ஸ் அப்படியே எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.

 உருளைக்கிழங்கு நன்கு வெந்து கிரிஸ்ப்பியாகும் வரை காத்திருந்து பின்னர் அதை ட்ரைன் செய்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் ரெடி.

 ஏற்கனவே கருவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து வைத்திருந்தால் அதனையும் இதன் மேல் தூவி விட்டால் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

இப்போது கடையில் செய்வது போல கிரிஸ்பியாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …