நடிகர் பிரபுவின் மகளை பார்த்துள்ளீர்களா.? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகர் பிரபு 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வந்த ஒரு நடிகர். பல முன்னணி நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித் திறமையால் நின்றிருந்தார்.

இவருக்கு விக்ரம்பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா பிரபு என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். விக்ரம்பிரபு தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மறுபக்கம் ஐஸ்வர்யா பிரபு கடந்த 2009ஆம் ஆண்டு தன்னுடைய உறவினரை திருமணம் செய்துகொண்டார்.

அதாவது தன்னுடைய தந்தை பிரபு-வின் இளைய தங்கையின் மகனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா பிரபு.  அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த பிரபுவின் இளைய தங்கையின் மகனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா பிரபு.

தற்போது, தன்னை ஒரு தொழிலதிபராக மாற்றிக் கொண்டிருக்கிறார், தற்பொழுது, காரணம் திருமணம் முடியும் வரை என்னுடைய பெற்றோர்களின் நிழலில் இருந்தேன். தற்போது திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய கணவர் வீட்டாரின் நிழலில் நான் இருப்பேன் என்றாலும் கூட எனக்கு நானே ஒரு நிழலை உருவாக்கி கொள்வது அவசியம்.

எனவே மெல்ட்ஸ் அண்ட் டெசர்ட்ஸ் என்ற ஒரு பெயரில் விதவிதமான கேக்குககள் மற்றும் இனிப்புகளை தயாரிக்கும் ஒரு தொழிலை செய்து வருகிறார். ஆர்டர் கொடுத்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யும் இந்த சேவையை செய்து வருகிறார் ஐஸ்வர்யா பிரபு.

தொடர்ந்து விதவிதமான கேக் மற்றும் வகைகளை செய்து வினியோகித்து தன்னுடைய இருப்பை தொழில் துறையிலும் உறுதிப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா பிரபு. சமீபத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய பேக்கிங் தொழில் பற்றி சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, என்னுடைய உணர்வு.. இதுவே.. என்னுடைய வேலையாக மாறி இருக்கிறது. சிலருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். எனக்கு அது கிடைத்திருக்கிறது. 10 நாட்கள் என் வேளையில் இருந்து ஓய்வில் இருந்தேன். அப்போது.. எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

நான் என்னுடைய பணியை விட்டு விலகினாலும் கூட பேக்கிங் செய்து கொண்டே இருக்கிறேன். உபகரணங்கள் இருந்தாலும் சரி.. உபகரணங்கள் இல்லாவிட்டாலும் சரி.. நான் என்னுடைய பேக்கிங் வேலையை தொடர்ந்து கொண்டே இருப்பேன். அது என்னால் முடியும் என்று பதிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா பிரபு.

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சிவாஜிகணேசனின் பேத்தி.. பிரபல நடிகர் பிரபுவின் மகன்… இளம் நடிகர் விக்ரம் பிரபுவின் தங்கை.. என இப்படி இருந்தாலும்கூட வெறுமனே இல்லாமல் தனியாக தொழில் தொடங்கி அதில் இயங்கி வரும் விக்ரம் பிரபுவின் தங்கையை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி தான் கொடுக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …