பிரபு தேவா போட்ட 3 கண்டீஷன் … எல்லாத்துக்கும் ஓகே சொல்லியும் ஆப்பு அடிச்சிட்டு போய்ட்டாரே!

தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா .

இவர் முதன் முதலில் ஐயா திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பெரும் புகழ் பெற்றார்.

நயன்தாராவின் அறிமுகம்:

இவர் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு அங்கு லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார் .

அப்போது இயக்குனர் ஒருவரின் பார்வை நயன்தாரா மீது விழ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தனர்.

மலையாளத்தில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்த நயன்தாராவுக்கு ஹரி தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுத்து இங்கு அழைத்து வந்தார்.

முதல் படத்திலேயே சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா பெருமளவில் புகழ்பெற்றதால் அடுத்ததாக இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனால் மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வந்த நடிகை நயன்தாரா இடையில் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கி விமர்சிக்கப்பட்டார் .

குறிப்பாக பிரபுதேவாவுடன் ஆன காதல் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா சினிமா வாழ்க்கை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்ற அளவுக்கு முடிவெடுத்து விட்டாராம்.

அந்த அளவுக்கு அந்த காதல் பெரும் தலைவலியை கொடுத்ததாக அவரே பேட்டிகளில் கூற கூடியிருந்தார்.

பிரபுதேவாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த அவர் பின்னர் அவரை பிரிந்து விட்டது ஏன் என்பது குறித்த கேள்வியும் இதுவரை வெளி வராத பல உண்மைகளும் இதில் அடங்கி கிடக்கிறது .

பிரபு தேவா போட்ட மூன்று கண்டீஷன் :

இந்த நிலையில் பிரபுதேவா நயன்தாராவின் காதல் விவகாரம் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரல் ஆகி வருகிறது .

அதாவது நடிகர் பிரபுதேவா நயன்தாராவிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்று கண்டிஷனை நீ கடைபிடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

அது என்னவென்றால் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்த நடிகை நயன்தாரா இந்து மதத்திற்கு மாற வேண்டும் என கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

இதற்கு நயன்தாராவும் ஓகே சொல்லி மதம் மாறி அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார். அத்துடன் திருமணத்திற்கு பிறகு முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் நிச்சயம் என்னுடன் தான் இருப்பார்கள்.

நான் தான் அவர்களை வளர்ப்பேன் என கூறி இருக்கிறார். அதற்கு நீ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என நயன்தாராவிடம் கராராக கூறினாராம் பிரபுதேவா.

அதற்கும் சரி என சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்தாரா பின்னர் கடைசியாக திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு அறவே விலகி விட வேண்டும் என கூறி இருக்கிறார் பிரபுதேவா.

இதைக் கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நடிகை நயன்தாரா அது என்னால முடியவே முடியாது என மறுப்பு தெரிவித்தாராம் .

இதனால் தான் காதல் முறிந்தது:

இதனால் தான் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் பிரேக்கப் ஆகிவிட்டதாக இணையத்தில் செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், நடிகை நயன்தாரா பிரபுதேவாவை உருகி உருகி காதலித்தார் .

அவர் சொல்வதற்கெல்லாம் அடங்கிப் போனார் என்றும் ஏற்கனவே பல செய்திகள் வெளி வந்து விட்டது.

பிரபுதேவாவது மீது அதீத காதல் இருந்ததால் தான் பிரபு தேவா சாயலில் இருந் விக்னேஷ் சிவனை பார்த்த உடனேயே அவர் மீது காதலில் விழுந்துவிட்டார் நயன்தாரா என கூறப்பட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version