நடிகர் பிரபு குடும்பம் பற்றி பலரும் அறிந்திடாத ரகசியங்கள்..!

சென்னை தி நகரில் நடிகர் சிவாஜி கணேசன் இல்லம் உள்ளது. இதில்தான் அவரது பிள்ளைகள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் தனது மகன்கள், பேரன் பேத்திகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லத்துக்கு அன்னை இல்லம் என்றுதான் பெயர்.

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம்

சில ஏக்கர் பரப்பபளவில் அரண்மனைப் போன்ற மாட மாளிகையாக இந்த வீட்டை கட்டியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் மறைவுக்கு பிறகும், அவரது வாரிசுகள் ராம்குமார், பிரபு இதே வீட்டில் இன்னும் அதே பாரம்பரிய முறைப்படி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுதவிர திரைத்துறை சார்ந்த சில பிஸினஸ்களிலும் அவர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன் கட்டிய சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு, இப்போது அங்கு பெரிய அளவில் ஷாப்பிங் காம்பளக்ஸ் கட்டி வருகின்றனர்.

சிவாஜி குடும்பம்

சிவாஜி கணேசனின் தந்தை பெயர் சின்னையா மன்றாயர். தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். இந்த தம்பதிக்கு சிவாஜி கணேசன் உட்பட மொத்தம் 5 பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் சகோதர்களில் ஒருவர் பெயர் சண்முகம். இவரை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்தார் சிவாஜி கணேசன், தன் தம்பி சண்முகத்தையும், அவரது குடும்பத்தையும் தன்னுடனே வைத்துக்கொண்டார் சிவாஜி.

சிவாஜி கணேசனின் சினிமா கால்ஷீட், கொடுக்கல் வாங்கல் மற்றும் சிவாஜி கணேசனின் படம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் என அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொண்டவர் தம்பி சண்முகம்.

குடும்பத்தில் முக்கியவரான சிவாஜி கணேசன், தனது சகோதர்கள், தங்கைக்கு தேவையான உதவிகளை செய்து, குடும்பங்களையும் பார்த்துக்கொண்டார்.

சிவாஜி சம்பாதித்து வாங்கிய முதல் வீடு திருச்சியில் உள்ளது. இந்த வீடு இன்னமும் சிவாஜி குடும்பத்தினர் வசம்தான் இருந்து வருகிறது.

ராம்குமார் – பிரபு

சிவாஜிகணேசன் மனைவி பெயர் கமலா அம்மாள். இவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற 2 மகன்களும், சாந்தி, தேன்மொழி என 2 மகள்களும் என மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..!

பிரபு குடும்பம்

கடந்த 1956ம் ஆண்டில் பிறந்த பிரபுவுக்கு இப்போது 68 வயதாகிறது. இவரது மனைவி பெயர் புனிதா. 1982ம் ஆண்டில் இவர்கள் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்ற பிள்ளைகள் உள்ளனர். விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கு, சமீபத்தில்தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடந்தது. இது ஐஸ்வர்யாவுக்கு 2வது திருமணம் எனபது குறிப்பிடத்தக்கது. விக்ரம் பிரபு மனைவி பெயர் லட்சுமி உஜ்ஜையினி.

குஷ்புவுடன் காதல்

சின்னதம்பி படத்தில் நடித்த பிறகு, குஷ்பு பிரபு இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் இந்த காதலை கண்டித்து பிரித்தவர் சிவாஜிதான்.

இதையும் படியுங்கள்: எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..!

ரகசிய மனைவி

ராம்குமார் மனைவி கண்ணம்மா. ராம்குமாருக்கு ரகசிய மனைவி அல்லது 2வது மனைவியாக இருப்பவர் மீனாட்சி. இவர் நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்கா. இவரை ராம்குமார் ரகசிய திருமணம் செய்துள்ளார். கண்ணம்மாவுக்கு 2 பிள்ளைகள், மீனாட்சிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால் மீனாட்சியையும், அவரது பிள்ளைகளையும் சிவாஜி குடும்பத்தில் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்படி சிவாஜி கணேசன், பிரபு குடும்பம் குறித்த பல ரகசியங்கள் ரசிகர்கள் அறியாத விஷயங்களாக இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version