வித்தியாசமான இயக்குனர் என்று பிரபு சாலமன்னை கூறலாம். இவர் இயக்கிய எல்லா படங்களுமே படு வித்தியாசமான கோணத்தில் இருந்ததால் இவரின் படங்களுக்கு எப்போதும் தனி மவுஸ் உள்ளது.
அந்த வரிசையில் தற்போது இவரது இயக்கத்தில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி வெளிவர இருக்கக்கூடிய செம்பி திரைப்படத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.
இதுவரை இல்லாத புதிய கதைக்கோணத்தில் எந்த படமானது படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடிப்படையில் இந்த படமானது மலைவாழ் மக்களின் பின்னணி பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கதை களத்தில் பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே உள்ள ஒரு வலுவான உறவை மையப்படுத்தி தான் கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள்.
இது நிச்சயமாக இன்றைய தலைமுறைக்கு ஒரு புதுமையான கருத்தை எடுத்துக் கூறும் வகையிலும், உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய விதத்திலும் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
இன்று குடும்பங்கள் அனைத்தும் தீவுகளாக பிரிக்கப்பட்டு அங்கு ஒருவரும் இங்கொருவருமாக சென்று கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையில் பாட்டிக்கும் பேட்டிக்கும் இடையே உள்ள அந்த பந்தத்தை மிகப் பக்குவமான முறையில் பிரபு சாலமன் விளக்கி இருப்பார்.
இந்தப் படத்திற்கான இசையை நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். மேலும் படப்பிடிப்பு முடிந்து விட்டு நிலையில் இறுதி கட்டப் பணிகள் மிக விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இதனை அடுத்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அண்மையில் தான் நடந்தது.
இதில் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்திற்கான ட்ரெய்லரும் தற்போது வெளியாகி பரபரப்பை பெற்று உள்ள நிலையில் இந்தத் திரைப்படமானது வரும் டிசம்பர் 30 வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.
அட இந்தப் படத்தை வேறு யார் வெளியிடுவார்கள் எப்போதும் போல உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவி தான் இந்த கைப்பற்றியுள்ளது.
மேலும் நிச்சயமாக இது ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வளரக்கூடிய தலைமுறைக்கு ஒரு செய்தியை தரவிடக்கூடிய வகையில் இந்த படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.