நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு. இவருக்கு தமிழ் சினிமாவில் இளைய திலகம் என்ற பட்டப் பெயர் உண்டு.

பிரபு

சங்கிலி என்ற படம் மூலம் அறிமுகமான பிரபு, கோழி கூவுது, சின்னப்பூவே மெல்லப் பேசு, அக்னி நட்சத்திரம், உரிமை கீதம், அஞ்சலி, பிள்ளைக்காக, சின்னதம்பி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.

ரஜினி, கமலுடன்

நடிகர் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களிலும், கமல்ஹாசனுடன் வெற்றி விழா, வசூல் ராஜா எம்பிபி எஸ் போன்ற படங்களிலும், நடிகர் சத்யராஜூடன் சின்னதம்பி, பெரியதம்பி, சிவசக்தி போன்ற படங்களிலும் பிரபு இரட்டை நாயகனாக நடித்திருக்கிறார்.

இப்போதைய நடிகர்களில் நடிகர்கள் விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா போன்றவர்களுடன் பிரபு நடித்திருக்கிறார். சிறைச்சாலை படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், பிரபு நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

குணச்சித்திர நடிகராக

நடிகர் பிரபு முதலில் கதாநாயகனாக நடித்த நிலையில், பிறகு ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். அப்பா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகர் பிரபுவும் குஷ்புவும் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். குறிப்பாக சின்னதம்பி, கிழக்கு கரை பாண்டித்துரை, மைடியர் மார்தாண்டன், உத்தமராசா உள்ளிட்ட பல படங்களில் குஷ்பு, பிரபு ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்: ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

இந்நிலையில் 1993ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பிரபல நாளிதழில் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

ஆனால் அப்போது பிரபு, சிவாஜியின் சகோதரி (அத்தை) மகள் புனிதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், அவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என்ற பிள்ளைகள் இருந்தனர்.

திருமணம் நடந்தது உண்மைதான்

அதனால் இந்த திருமணம் குறித்து சிவாஜி வீட்டில் பெரிய சர்ச்சை வெடித்த நிலையில், அப்படி ஒரு திருமணம் நடக்கவில்லை. அது வதந்தி என்று மறுத்துவிட்டனர். ஆனால் இப்போதும் சிலர் பிரபு, குஷ்பு திருமணம் நடந்தது உண்மைதான் என்று கூறி வருகின்றனர்.

பிரபு இப்போது சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி டிவி விளம்பரங்களில் குறிப்பாக நகை விளம்பரங்களில் அதிகமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டிப்பையன்

வழக்கமாக சமூக வலைதளங்களில் நடிகர்களின் சின்ன வயது புகைப்படங்களை வெளியிட்டு, யார் இந்த பிரபல நடிகர் என்பது வழக்கமாக நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: காதலனை கரம் பிடிக்கும் பாவனி ரெட்டி.. இது எத்தனையாவது திருமணம் தெரியுமா..?

ஆனால், நடிகர் பிரபு பல ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் பிரபுவும், அவருக்கு மிக அருகில், இடுப்பில் கை வைத்து பிரபு போலவே போஸ் தரும் சிறுவன் ஒருவரும் நிற்கிறார்.

அதில் பிரபுவுக்கு மிக அருகில் நிற்பவரும் இப்போது பிரபல நடிகர்தான் என்ற நிலையில், பிரபுவுடன் புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமல்ல, பிரபுவின் மகன் விக்ரம் பிரபுதான் என்று தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த புகைப்படத்தில், நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன், தற்போது பிரபல நடிகரான அவரது மகன் விக்ரம் பிரபுதான் என்பதை அறிந்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version