லவ் டுடே பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஸ்பெஷல் கிப்ட்டா அனுப்பியது யார் தெரியுமா?

 தமிழ் திரை உலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படக்கூடிய நிலையில் இருக்கும் லவ் டுடே திரைப்படத்தை இயக்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த கதையை இயக்கும்போது இதற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று அவரை நினைக்கவில்லை.

 காதலை மையமாகக் கொண்ட இந்த கதைக்களத்தில் காதலர்கள் இருவரும் தங்களது போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்ற புதுமையான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இளசுகள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக மரியாதை மட்டுமல்ல வரவேற்பும் கிடைத்தது.

 வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை 35 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர்  கிட்டை கொடுத்து விட்டது.

 இந்த திரைப்படத்தை தற்போது தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பாட்டு இயக்குனரை தன் வீட்டுக்கு அழைத்து பாராட்டியுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் பிரதீப்புக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு பூங்கொத்து ஒன்றை ஸ்பெஷல் கிப்டாக அனுப்பியுள்ளார்.

இதில் இயக்குனர் அன்புள்ள பிரதீப் லவ் டுடே படத்தின் அமோக வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று எழுதி அனுப்பி வைத்திருக்கக்கூடிய சிம்புவின் பூங்கொத்தை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் பதிவிட்டு மட்டுமல்லாமல் சிம்புவுக்கும் நன்றியும் சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர் உங்களது ஆதரவு மற்றும் முதல் போன் காலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது சார் என்று அவர் பதிவிட்டு இருப்பது தற்போது வைரலாக பரவி வருகிறது.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்ற வாக்கியத்திற்கு ஏற்பது போல் சிம்பு மற்றும் ரஜினிகாந்தின் இந்த செயல் தற்போது திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 இதை தொடர்ந்து வளர்ந்து வரும் இது போன்ற புதிய கலைஞர்களை ஊக்குவிப்பதின் மூலம் நிச்சயமாக திரை உலகில் நிறைய சாதிக்க வேண்டும் என்று துடிக்க கூடிய இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …