பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படமானது திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மிக வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மிகக் குறைந்த அளவு பட்ஜெட்டை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருப்பதால் தமிழ் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நல்ல கதை அம்சம் இருந்தால் பட்டையை கிளப்பும் என்று இது உறுதி அளித்து விட்டது.
இது போலவே கன்னடத்தில் அண்மையில் வெளியான காந்தாரா படமும் குறைந்த பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த ரஜினிகாந்த் அந்த படத்தின் இயக்குனரை அழைத்து அவருக்கு பாராட்டும் தெரிவித்த விதம் பாராட்டுக்குரியது.
அதுபோல தான் எந்த ஒரு அலப்பறையும் இல்லாமல் சைலன்டாக வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும்பான்மையை பிடித்து இருக்கும் லவ் டுடே தற்போது மிகப் பெரிய அளவில் ஓடி வருகிறது.
இந்தப் படத்தில் இவானா, ராதிகா சரத்குமார் ,சத்யராஜ் ,யோகி பாபு போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தற்காலிகத்தில் இருக்கக்கூடிய காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறது.
இதனால் தான் இளசுகளின் மத்தியில் எந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்று அனைவரும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் மிகப்பெரிய பட்ஜெட் படமான பொன்னியின் செல்வன் படத்தையும் இந்த படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது இரண்டாவது நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 6.6 கோடி வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒன்பது புள்ளி ஐந்து கோடிகள் வசூல் செய்திருப்பதால் இந்த படம் தொடர்ந்து வசூலை பெறும் என்று விமர்சனங்கள் வந்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் அதிகம் அறிமுகம் இல்லாத இந்த நடிகரின் நடிப்புக்கு இவ்வளவு வசூல் கிடைத்திருப்பது மிகவும் சிறப்பான விஷயமாக கருதப்படுகின்ற வேளையிலே லவ் டுடே இன்னும் அதிக அளவு வசூலை குவிக்கும் எனவும் வரக்கூடிய நாட்களில் அது அதிமாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.