பதிவுகளால் ஏற்பட்ட சர்ச்சை… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய லவ் டுடே இயக்குனர் பிரதீப்…!!

கோலிவுட்யை தன் பக்கம் திருப்பி விட்ட லவ் டுடே படத்தின் வெற்றி காரணமாக தற்போது இதன் இயக்குனர் பிரதீப் மாபெரும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்திற்காக வெறும் ஐந்து கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. ஆனால் இது வசூல் செய்துள்ள தொகை பார்க்கும்போது 50 கோடியை கடந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

 எனவே இந்த படத்திற்காத பணியாற்றிய படக்குழு மட்டுமல்ல படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்  சந்தோஷத்தில் உள்ளது. படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் செயலாற்றிய பிரதீப்பின் நடிப்பு பெருமளவு பாராட்டுகளை பெற்றுள்ளது.

 இதனை அடுத்து இவர் பற்றிய ரகசிய செய்திகளை தெரிந்து கொள்ள விரும்பிய நெட்டின்சன்கள் இவரது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை சல்லடை போட்டு அலசியது.

 இதில் அவர் போட்ட பழைய சமூக வலைதள பதிவுகளைத் தேடிப் பிடித்து வைரலாக்கிவிட்டது. இதனால் இந்த இதனால் இந்த பதிவில் இவர் யுவன் மற்றும் நடிகர் விஜயின் படங்களை விமர்சித்து பதிவிட்ட பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

 அதனை அடுத்து இந்த பதிவுகள் வைரலாக சில இயக்குனர் பிரதீப்பை கடுமையாக ட்ரோல் செய்ய தொடங்கினர். இதைப் பற்றி மிக ஓப்பனாக தற்போது இயக்குனர் பிரதீப் பேசி விளக்கம் அளித்து ட்விட்டரில் அவர் போட்டுள்ள பதிவில் கூறி இருப்பது என்னவென்றால் பரவி வரும் என்னுடைய பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை.

இதில் ஒரு வார்த்தையை மாற்றினால் பல விஷயம் மாறும் என்பதால் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை  டிஆக்டிவேட் செய்து அதிலிருந்து விலகி விட்டதாக கூறியிருக்கிறார்.இது போன்ற விஷயங்களை மாற்றக்கூடிய மனிதர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்களுக்கு நான் நன்றி தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் உண்மையை விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள். பதிவுகள் இதில் உண்மையானவை ஆனால் கசப்பான வார்த்தைகளுடன் கூடிய பதிவுகள் போலியானது நான் தவறு செய்துவிட்டேன் என்று உருகமாக அந்தப் பதிவில் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

 எனவே இவரை அறியாமல் ஏற்பட்ட எந்த தவறுக்கு இவரை நொந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. இது போன்ற வேலைகளை செய்யக்கூடியவர்கள் இதை விடுத்து நல்ல முறையில் ஏதாவது யோசித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam