படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்..! சீரியல் நடிகை பிரகதி பரபரப்பு புகார்..!

பிரகதி மகாவாடி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.

தமிழில் கே பாக்யராஜ் நடித்த வீட்ல விசஷேங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், வாழ்க ஜனநாயகம், புதல்வன், ஜெயம், சும்மா இருங்க மச்சான், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பிறகு தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனைக்கிளி, பெண் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

பிரகதி..

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை பிரகதி தனது மகனுடன் வாத்தி பாடலுக்கு ஆடி, அந்த வீடியோவை வெளியிட அது வைரலானது.

படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்..

இந்நிலையில் பரபரப்பான ஒரு தகவலை பிரகதி சமீபத்தில் கூறியிருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையில் நடந்த சம்பவம் இது. சீனியர் காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்.

மறைமுகமாக என்னை படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகரை, பல பேர் முன்னிலையில் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை.

மாலை வரை பொறுமையாக இருந்து, பின் அவரை என் கேரவனுக்கு வரவழைத்து பேசினேன். நான் உங்களிடம் தவறாக நடந்துக்கொள்ள ஏதாவது சிக்னல் கொடுத்தேனா என்று கேட்டார்.

அவர் இல்லை என்றார். என் பாடி லாங்குவேஜ் உங்களுக்கு அப்படி தோன்றியதா என கேட்டபோதும் இல்லை என்றார்.

நீங்கள் நடந்துக்கொண்ட விதம் மிகவும் தவறானது. ரொம்பவும் கீழ்த்தரமான செயல் என்றேன். அந்த இடத்திலேயே உங்களை அவமானப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் உங்கள் இமேஜ் கெட்டுவிடக் கூடாது என்பதை இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து இப்போது சொல்கிறேன், என அவரை எச்சரித்து அனுப்பினேன், என்று பிரகதி கூறியிருக்கிறார்.

பிரகதியை படுக்கைக்கு அழைத்த அந்த சீனியர் காமெடி நடிகர் யார் என்பதுதான் இப்போது பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *