48 வயதில் இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? பிரபல நடிகை குறித்து வெளியான தகவல்..!

ஆந்திர பிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை பிரகதி மகாதேவி. தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவர் பிரபலமான குணசித்திர நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட 48 வயதாகும் நடிகை பிரகதி தற்போது வரை கவர்ச்சிக்கு குறை வைக்காமல் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களை வெளியிட்டதன் மூலம் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நடிகை பிரகதி மகாதேவி:

இதனிடையே குணச்சித்திர நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரகதிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

முதன் முதலில் மைசூர் சில்க் பேலஸ் விளம்பரத்திற்கு விளம்பரம் செய்ததன் மூலமாக இவர் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

பின்னர் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் விளம்பரங்கள் சீரியல்கள் என எது கிடைத்தாலும் அதில் நடித்து மக்களின் முகமறியப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதுவரை ஏழு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கிலும் கணிசமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பாண்டியனின் ராஜ்யத்தில், சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகம் ,புதல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் .

தமிழ் படங்கள்:

பின்னர் 2000 கால கட்டத்தில் ஜெயம் , சிலம்பாட்டம் , தைரியம், தோனி ,இஷ்டம் ,கெத்து, தாரை தப்பட்டை, யாகவராயினும் நாகாக்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திரர் நடிகையாக நடித்து புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் அடித்த சீரியல் ஆக பார்க்கப்பட்டு வந்த அரண்மனைக்கிளி சீரியலில் மாமியார் ஆக நடித்து அனைத்து கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.

இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கத்தனர். அண்மையில் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்டில் விசேஷம் திரைப்படத்தில் நடிகையாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

தொடர்ந்து இப்படி அக்கா ,அண்ணி , அம்மா, என குணச்சித்திர வேதங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் வைத்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .

48 வயசில் தாறுமாறான கவர்ச்சி:

வயசாகிவிட்டாலும் இளமை குறையாது என கூறும் வகையில் அவ்வப்போது தனது கவர்ச்சி அழகை காட்டி ஹாட்டான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையவாசிகளை திணற வைப்பார்.

பிரகதி தன்னுடைய 20 வயதில் ஐடி நிறுவன ஊழியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.

தற்போது வரை தனியாக வாழ்ந்து இரண்டு மகன்களையும் படிக்க வைத்து ஆளாக்கிவிட்டார். தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை தன்னுடைய 48 வயதில் காதலித்து வருவதாகவும் செய்தி வெளியானது.

மறுமண வதந்திக்கு பதில்:

மேலும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானதை பார்த்து மிகுந்த கோபத்திற்குள்ளான பிரகதி இது குறித்து சமூக வலைத்தளங்களில் காட்டமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதுபோன்ற ஆதாரமில்லாத செய்தி வெளியிட்ட தெலுங்கு தொலைக்காட்சியை கிழித்து தொங்கவிட்டுவிட்டார் நடிகை பிரகதி.

நடிகைகள் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அவர்களை இழிவாக பேசலாமா? என்று வன்மையாக கண்டித்து இருக்கிறார். அவருக்கு பலரும் ஆதரவு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version