தமிழ் சினிமாவில், சில அம்சமான நடிகைகள் அவ்வப்போது படங்களில் தோன்றி நடிக்கின்றனர் ஆனால் மின்னுகிற நட்சத்திரம் போல் சில படங்களில் மட்டும் வந்துவிட்டு, பிறகு திடீரென காணாமல் போய்விடுகின்றனர்.
அவ்வளவு அழகான நடிகைகளை, சில படங்களிலேயே இழந்து விடுவது என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் வருத்தமும் தருகிறது.
பிரணிதா சுபாஷ்
பிரணிதா சுபாஷ் கடந்த 2009 ஆண்டில் போக்கிரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் எம் பில்லோ எம் பிள்ளடோ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
அதன் பிறகு பாவா என்ற தெலுங்கு படத்தில் பிரணிதா, தொடர்ந்து 2011ம் ஆண்டில் உதயன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சகுனி படத்தில்…
அதன் பிறகு ஜரசந்தா, பீமதீர தல்லி ஆகிய கன்னட படங்களில் நடித்த அவர் தொடர்ந்து 2012ம் ஆண்டில் சகுனி என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
அதைத் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்த பிரணிதா, 2015ம் ஆண்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவை சேர்ந்தவர்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களை நடித்த அவர், முதல் முதலாக அறிமுகமானது தெலுங்கு திரைப்படமான போக்கிரி படத்தின் ரீமேக் ஆன கன்னட படத்தில்தான்.
தொழிலதிபருடன் திருணம்
அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் பிறகு தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்.
மாடலிங் துறையில் இருந்து, சினிமாவுக்கு வந்த இந்த அழகான நடிகை, தனக்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற முடியாமல் சினிமாவை விட்டே சில காலமாக ஒதுங்கி இருக்கிறார்.
கணவருக்கு பாத பூஜை வைரல்
கடந்த ஆண்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரணிதா, தனது கணவர் நிதின் ராஜூக்கு பாத பூஜை செய்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணிதா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக அவரது நீச்சல் உடை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அம்மா ஆன பிறகும் இப்படியா…
நீச்சல் உடையில் பிரணிதா சுபாஷை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா உச்சக்கட்ட கவர்ச்சி காட்டுவது என்று புலம்பினாலும், அந்த புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர்.