பிரபல இளம் நடிகை பிரணிதா சுபாஷ் தமிழில் உதயன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் தனது காதலர்களும் தொழிலதிபருமான நிதின்ராஜ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் அடுத்த சில மாதங்களில் கர்ப்பம் தரித்தார்.
தற்பொழுது அழகான பெண் குழந்தை ஒன்றுக்கும் தாயாகியிருக்கிறார் குழந்தை பிறந்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிலைமை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
காரணம் திருமணம் குழந்தைகள் பிறப்பு என பிசியாக இருந்த பிரணிதா தற்பொழுது திரைத்துறையில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்க தயாராகி விட்டார் எனவே குழந்தை பிறந்ததற்கு பிறகு கூடிய தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கும் இவர் பிரபல மலையாள நடிகர் திலீப் குமார் நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை ரகுநாதன் இயக்குகிறார் இது பற்றி நடிகை பிரணிதா கூறியதாவது முதன்முறையாக என்னுடைய குழந்தையை பெங்களூரில் விட்டு விட்டு படத்தில் நடிப்பதற்காக கேரளாவுக்கு செல்கிறேன்.
மகளை விட்டுவிட்டு நீண்ட நாட்கள் விலகி இருக்க வேண்டும் என்பதால் ஒரு விதமான பதட்டம் எனக்குள் இருக்கிறது. மலையாள படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் கூட அந்த வசனங்களை கற்றுக் கொண்டு பேசுவது எனக்கு ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது.
பிற மொழிகளை என்னால் வேகமாக கற்றுக் கொள்ள முடியும். அந்த திறமை எனக்குள் இருக்கிறது. ஆனால் மலையாளம் பேசும் தொணிக்கு சற்று அதிகமான பயிற்சி தேவை என்று நினைக்கிறேன்.
அந்த பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நான் படத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுப்பேன் என்று பதிவு செய்திருக்கிறார். மறுபக்கம் அடுத்த அடுத்த தன்னுடைய பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது தன்னுடைய முன்னழகு ததும்பும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் சூட்டில் தவித்து வருகிறார்கள்.