மாடல் அழகியாக தனது கெரியரைத் தொடங்கி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.
பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் முட்டை கண்ணழகு, நல்ல உயரமான தோற்றம், கவர்ச்சியான உடல் அமைப்பு உள்ளிட்டவற்றால் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.
நடிகை பிரணிதா சுபாஷ்:
இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் .
அதை எடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பிரணிதாவுக்கு தமிழில் முதன்முதலில் உதயம் திரைப்படத்தின் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார்.
பின்னர் 2012ல் சகுனி என்ற திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இப்படத்தில் கார்த்திக் கதாநாயகராக நடித்து அவருடன் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை அவ்வளவு பக்காவாக பொருந்தியது .
இந்த படத்தை தொடர்ந்து மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து அதிக கன்னட படங்களில் அவர் நடித்து வந்தார்.
நல்ல அழகு கவர்ச்சிகரமான தோற்றம் உள்ளிட்டவை இருந்தும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
மார்கெட் இழந்த பிரணிதா:
புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்து போன பிரணிதா தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தன சமூக வலைதளங்களில் விட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.
பல்வேறு விளம்பர படங்களில் நடித்தும் அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து பார்த்தார். இருந்தாலும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் என்ன செய்வது என்று மிகுந்த மன வருத்தத்தில் இருந்த பிரணிதா வேறு வழி இல்லாமல் தன்னுடைய நீண்ட நாள் காதலரான நித்தின் ராஜ் என்ற தொழிலாதிபரை கடந்த 2021 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடந்தது .
திருமணத்திற்கு பிறகு சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பிரணிதாவுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் பிரணிதா.
பிரணிதா திரைப்படங்களில் நடிப்பதற்கு அவரது கணவர் ஊக்கம் அளித்து வருவதாகவும் கூறியிருந்தார் இதனிடையே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் க்யூட்டான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் .
மேலும், குழந்தை பிறப்புக்குப் பிறகும் அவரது கவர்ச்சி அழகு குறையாமல் அப்படியே மெயின்டைன் செய்து வருவதோடு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டும் அவர் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
மீண்டும் பிஸியான நடிகையாக பிரணிதா:
இதனிடையே சமீப நாட்களாக. பிரணிதா சுபாஷ் தங்கமணி என்ற மலையாள திரைப்படத்திலும் கன்னடத்தில் வெளியான பிராமண அவதார என்கிற படத்தில் சீதையாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வ வருகிறார். இப்படியான நிலத்தில் பிரணிதா தனது மூன்றாம் ஆண்டு திருமண நாளை தனது கணவருடன் தாய்லாந்தில் கொண்டாடி வருகிறார்.
அப்போது பாத் டப்பில் பொட்டு துணி அணியாமல் வெறும் சோப்பு நுரையால் உடலை மூடிக்கொண்டு குளியல் போட்ட வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் ஸ்தம்பித்து போக வைத்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் ஒரு நிமிடம் தலையே சுத்தி போச்சு என மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.