கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்.. மேடையில் பிரசன்னா சொன்ன வார்த்தை.. தேம்பி தேம்பி அழுத சினேகா..!

காதல், திருமணம், விவாகரத்து பின்னர் பிரிவு என இருந்து வரும் நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு சில ஜோடிகள் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

அந்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி. நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து ஓரளவுக்கு தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சினேகா – பிரசன்னா ஜோடி:

ஆனால், என்று அவர் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாரோ அன்றே அவரது லெவெலும் வாழ்க்கையும் வேற ரஞ்சுக்கு மாறிவிட்டது.

சினேகாவின் கணவர் பிரசன்னா என்ற அடையாளத்தோடு தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரசன்னா.

முதன் முதலில் 2002ம் ஆண்டு வெளிவந்த “5ஸ்டார்” என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்திருந்தார் அதை அடுத்து அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும் , மஞ்சள் வெயில் ,நாணயம், கோவா, பாணா காத்தாடி இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கும் அளவுக்கு எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகளும் அமையவில்லை.

காதலை மலர்ந்தது இப்படித்தான்:

இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வந்தார். இதனிடையே அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் சினேகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் பிரசன்னா .

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை நட்பாக மாறியது. பின்னர் காதலாக உருமாறியது. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் . குடும்பம் குழந்தை என அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகை சினேகா 2000 காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார். இவர் அஜித் , விஜய் , கமல் , தனுஷ், சூர்யா என அடுத்தடுத்து ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சினேகா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாகவும், கனவு கன்னியாகவும் புகழ் பெற்றிருந்தார் .

சினேகாவின் திரைப்பயணம்:

மேலும் சினேகாவை புன்னகை அரசி என ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தார்கள். என்னவளே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்,

மேலும் , வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை இப்படி பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக இடத்தைப் பிடித்து வந்ததார் .

இப்படியான சமயத்தில் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பிறப்புக்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த சினேகா மீண்டும் திரைப்படங்களில் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி நடித்து வருகிறார்.

தற்போது கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

பிரசன்னா சொன்ன வார்த்தை – கலங்கிய சினேகா:

அப்படித்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் சினேகா நடுவராக இருந்து வந்தார். அப்போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரசன்னா.

அந்த நிகழ்ச்சியில் வயதான ஜோடியின் நடனம் அரங்கேற்றத்தை பார்த்து நான் சினேகாவுடன் வயது முதிர்ச்சி அடையும் போது இப்படித்தான் வாழ வேண்டும் என கூறினார்.

இதனை கேட்டவுடனே சினேகா சட்டென மேடையிலேயே கலங்கி எமோஷ்னல் ஆகி அழுதுவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த அளவுக்கு அதீத காதலை ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் இந்த ஜோடி அவ்வப்போது இப்படியாக Couple Goals’யை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version