தமிழ் சினிமாவில் பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்து வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து 2000 கால கட்டம் வரை தொடர்ந்து முன்னணி திரு நடிகராக தென்பட்டு வந்தார்.
1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்பட நடிகராக அறிமுகமாக முதல் படத்தில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.
நடிகர் பிரசாந்த்:
தொடர்ந்து அவர் பண்ண பூச்சிகள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், திருடா திருடா, கண்மணி ,செந்தமிழ் செல்வன், ஆணழகன், கல்லூரி வாசல், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம்,
ஜோடி ,பிரியாத வரம் வேண்டும் ,விரும்புகிறேன், வின்னர், ஆயுதம், லண்டன், ஜாம்பவான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பிரசாந்த் நடித்து முன்னணி நடிகராக இவர் தென்பட்ட வந்தார்.
இதையும் படியுங்கள்: சைடு ரோலில் நடிக்க படுக்க கூப்பிடுறாங்க.. வேற வேலையே இல்லையா.. சீரியல் நடிகை சுளீர்..!
குறிப்பாக பிரசாந்தின் மார்க்கெட் மாபெரும் உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் இவரது தந்தை தியாகராஜன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
அந்த காலத்தில் அஜித் விஜய் இவர்கள் இருவரும் எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டிருந்தால் நடிகர் பிரசாந்த்.
உச்ச நடிகராக பிரசாந்த்:
விஜய் அஜித் இவர்களெல்லாம் 10 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பிரசாந்த் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அளவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளருக்கு மாபெரும் லாபம் ஈட்டி தரும் நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே இவரது வாழ்க்கை திருப்பி போட்டதற்கும் இவரது மார்க்கெட் சரிந்து போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவரது திருமண வாழ்க்கை தான்.
திருமணம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற்றிருந்த போதே 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை அவருக்கு சரியாக அமையவில்லை. கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார் என்பதை மறைத்து பிரசாந்தை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது பிரஷாந்துக்கு முதலிரவில் தான் தெரிய வந்தது.
அதன் பின்னர் அவர்களுடன் வாழ விருப்பம் இல்லாமல் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வேண்டி பிரசாந்த் மனுதாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?
ஆனால் அந்த கிரகலட்சுமி என்ற பெண் பிரசாந்தை விடாமல் அவரின் சொத்துக்காக அவருடன் தான் வாழ்வேன் என விடாப்பிடியாக இருந்தார்.
அதன் பின்னர் கோர்ட் மனமிறங்கி பிரசாந்தின் நிலைமையை பார்த்து கிரகலட்சுமிக்கு பிரசாந்த் உடன் வாழ தகுதியே இல்லை. முதல் திருமணத்தை ஏமாற்றியது மிகப்பெரிய தவறு என விவாகரத்து கொடுத்துவிட்டது.
இந்த சமயத்தில்தான் பிரசாந்த் உச்ச நடிகராக இருந்தபோது கோர்ட்டு கேஸ் என அலைந்துக்கொண்டு இருந்ததால் அவரது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் மார்க்கெட் சரிந்து போனார்.
மார்க்கெட் சரிந்து போனாலும் பிரஷாந்த் கோடீஸ்வரர் ஆக தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஆம் அவரது சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரசாந்த் கோல்ட் டவர்:
பிரசாந்துக்கு தி.நகரில் பிரசாந்த் கோல்ட் டவர் என்கிற 17 மாடுகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் உள்ளது அதில் உலகத்தரம் வாய்ந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை இயங்கி வருகிறது.
இதையும் படியுங்கள்: என் கணவர் அந்த விஷயத்தில் இப்படி இருக்கணும்.. 27 வயசுல ஜான்வி கபூரின் ஆசையை பாத்திங்களா..?
அதன் மூலம் இவருக்கு வாடகை மட்டும் பல கோடி வருகிறதாம். அது மட்டும் இல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் சம்பாதிக்கும் பிரசாந்துக்கு அதிலும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறதாம்.
இது தவிர ஆடி பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். சென்னை மதுரை கோவை உள்ளிட்ட பல இடங்களில் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வீட்டை இவர் வைத்திருக்கிறார் கிட்டத்தட்ட இவரின் சொத்து மதிப்பு 85 முதல் 90 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது.