பா ரஞ்சித் வெற்றிமாறன் வளர்ச்சியே.. தமிழ் சினிமா நாசமாக காரணம்.. பிரபல இயக்குனர் விளாசல்..!

தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனர்களின் சிந்தனை மற்றும் கதைக்களத்தின் மூலம் வளர்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியிருக்கும் இயக்குனர் என்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது தமிழ் திரைப்படத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் இதன் காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா நாசமாக காரணம்..

இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை இவர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து முதல் முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி பின்னர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இவரைப் போலவே இயக்குனர் வெற்றிமாறன் ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடிய வகையில் தனது படங்களுக்கான கதைக்களத்தை அமைத்து தேசிய விருதை வென்றெடுத்த இவரைப் பற்றி அதிகம் பகிர வேண்டியது இல்லை.

இந்த இரண்டு இயக்குனர்களால் தான் தற்போது தமிழ் சினிமா தரம் கெட்டு போனது என இயக்குனர் பிரவீன் காந்தி விமர்சனம் செய்திருக்கும் விதமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பா ரஞ்சித்.. வெற்றிமாறன்.. வளர்ச்சியா?

பொதுவாகவே தமிழ் சினிமாவில் 80, 90களில் ஜாதியை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்ததை அடுத்து ஒரு கட்டத்தில் அது மாதிரியான படங்கள் வருவது குறைந்து போன நிலையில் பா ரஞ்சித் சாதியத்தை மையப்படுத்தி தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அத்தோடு வெற்றிமாறன் ஆரம்பத்தில் இரண்டு கமர்சியல் படங்களை தந்திருந்தாலும் தனது ரூட்டை மாற்றிக் கொண்டு ஆதிக்க வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய வசனங்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இது போன்ற படங்களுக்கு சிலர் ஆதரவாக இருந்தாலும் வேறு சிலர் இது பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி தனது படங்களிலும் தான் பேசும் மேடைகளிலும் ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும் இயக்குனர் பா ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றவர்க்கு எதிராக பேசி வருகின்ற நிலையில் நடிகர் ரஞ்சித் இணைந்து விட்டார்.

இவர் தற்போது கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் குறிப்பிட்ட ஜாதியினரையும் கட்சி தலைவரையும் கடுமையாக விமர்சிக்கக்கூடிய காட்சிகளை வைத்திருக்கிறார்.

பிரபல இயக்குனர் விளாசல்..

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேரரசு, பிரவீன் காந்தி, உதயகுமார் போன்றவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழாவில் பேசிய பிரவீன் காந்தி பா ரஞ்சித் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் சினிமாவில் உச்சத்தை கண்ட பிறகு தான் தமிழ் சினிமா வீழ்ந்தது என்று நான் சொல்வேன்.

இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் ஜாதியை பற்றி பேசக்கூடாது. அப்படி சினிமாவில் எவன் ஜாதியை பேசுகிறானோ அவன் சமுதாயத்தில் ஒதுக்கப்பட வேண்டியவன் என்ற கருத்தை பதிவு செய்துவிட்டார்.

இதனை அடுத்து பிரவீன் காந்தியின் இந்த பேச்சு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் சொல்வதில் ஏதேனும் உண்மை உள்ளதா என்ற ரீதியில் தர்க்கம் செய்ய வைத்துள்ளது.

கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்களை சீரழிக்கக்கூடாது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என பிரவீன் காந்தி பேசிய பேச்சு ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version