மலையாளத் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவர் தான் பிரவீனா. இவர் தமிழ் சீரியலான ராஜா ராணி சீரியலில் மிக நன்றாக நடித்ததலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இவர் பிரியமானவள் என்ற சீரியலில் தமிழ் மக்களின் நெஞ்சை கவரும் விதத்தில் நடித்ததின் காரணமாக இல்லத்தரசிகளின் வீட்டில் இவரும் அவர்கள் வீட்டில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் என கூறலாம்.
மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடித்திருக்க கூடிய இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணைய தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்ற புகாரை போலீஸ் நிலையத்தில் அளித்திருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயத்தில் என்ன உண்மை உள்ளதா? என்று கண்டறிய களம் இறங்கிய காவல்துறையினர் பாக்யராஜ் என்ற மாணவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் பிரவீனா இது குறித்து தெரிவிக்கும் போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தை அடுத்து சிலர் பழி வாங்குவதற்காக தனது மகளின் புகைப்படத்தையும் நண்பர்களின் புகைப்படத்தையும் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து மகளும் தற்போது சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது போன்ற சைபர் கிரைம் தற்போது அதிகரித்து வரக்கூடிய வேளையில் தக்க நடவடிக்கையை அரசு மற்றும் திரையுலகத்தைச் சார்ந்தோர் எடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் கூறியிருக்கிறார்.
இதை எடுத்து இது போன்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கும் வண்ணம் போலீசார் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் எடுத்து இதற்கு தீர்வு வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.