பிரவீனா : சன் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒரு சீரியல் பிரியமானவள். இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை பிரவீனா-வுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இவர் மலையாளத்தில் ஹீரோயினாகவும் சின்னத்திரையில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர். தமிழில் மகராசி என்ற சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த மகராசி தொடரில் இருந்து பாதியிலேயே பிரவீனா விலகி விட்டார் என்பது கூடுதல் தகவல். அதன்பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடிகை ஆலியா மானசாவிற்கு ஸ்ட்ரிக்டான மாமியாராக நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை பிரவீனா நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.
நடிகர் விக்ரமின் சாமி 2, நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கேரளாவிலுள்ள செங்கண்ணன் சேரியில் பிறந்த இவர் தன்னுடைய 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரவீனா தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகள் எல்லாம் ஓரமா போங்க என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.