வயசு ஏற ஏற.. கிளாமர் கூடுதே.. இன்ஸ்டாவை கலக்கும் சீரியல் நடிகை பிரவீனா..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை பிரவீனா பல்வேறு சீரியல்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் மலையாள திரைப்படங்களில் குணசித்திர கதாநாயகியாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றிருக்கிறார் .

குணசித்திர நடிகை பிரவீனா:

1992 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கௌரி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து 1998 ஆம் ஆண்டில் “அக்னிசாட்சி” என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2008ல் “ஒரு பெண்ணும் ரெண்டாணும்” ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது பெற்று பாராட்டப்பட்டார்.

நடிகை பிரவீனா தொடர்ச்சியாக மலையாளத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அங்கிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்க ஏராளமான படங்களிலும் நடித்து பிரபலமான தென்னிந்திய நடிகையாக கவனம் ஈர்த்தார்.

பிரவீனா நடித்த படங்கள்:

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் அம்மா மற்றும் அக்கா ரோல்களில் நடித்திருக்கும் பிரவீனா தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி , லாபம் , வாந்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

படத்தில் குணசித்திர ரோலாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாகவும் மக்கள் மனதில் பதியும்படியாகவும் அமையும்.

அப்படித்தான் அவர் மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். தமிழ் தொலைக்காட்சி தொடர்களை காட்டிலும் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார்.

சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் பிரவீனா முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம குடும்பம் என்ற சீரியல் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார்.

அதை அடுத்து மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி , ராஜா ராணி 2 , இனியா உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

வயசு ஏற ஏற கூடும் கிளாமர்:

சீரியல் நடிகை என்பதைத் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரவீனாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர்.

மேலும் இவர் சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளையும் பெற்று கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்.

கேரள மாநில விருதுகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் பல விருதுகளை குவித்திருக்கிறார் நடிகை பிரவீனா.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துக்கொண்டு அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

இருந்தாலும் வயது முதிர்ந்த காலத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளவாசிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

46 வயதாகும் நடிகை பிரவீனா கொப்பும் குலையுமாக இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே என அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்து விழுவதும் உண்டு.

அந்த வகையில் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம கூலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் வயசு ஏற ஏற தான் கிளாமரும் கவர்ச்சியும் கூடுது என கிளாமர் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version