தமிழ் சீரியலில் நடிக்க இத கட்டாயம் பண்ணி தான் ஆகணும்.. ஓபனாக பேசிய சீரியல் நாயகி பிரவீனா!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்த மலையாள நடிகைகளில் ஒருவரான நடிகை பிரவீனா சீரியல்களில் அதிகளவு நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.

அந்த வகையில் இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார். இவர் முதல் முதலில் தேவி மகாத்மியம் என்ற புராணத் தொடரில் பார்வதியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார்.

நடிகை பிரவீனா..

மேலும் 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் நடித்த இவர் 1998-ஆம் ஆண்டில் அக்னி சாட்சி, 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் போன்ற படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

கேரளா அரசின் திரைப்பட விருதை நான்கு முறை வென்றிருக்கக்கூடிய இவர் 1998-ஆம் ஆண்டு வெளி வந்த அக்னி சாட்சியில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் திரைப்பட விருதை வென்றவர்.

மேலும் இவர் 2011-ஆம் ஆண்டு வெளி வந்த எலக்ட்ரா மற்றும் இவன் மேகரூபன் படத்திற்கு மிகச்சிறந்த பின்னணி குரல் கொடுத்ததற்காக கேரளா அரசின் திரைப்பட விருதையும் வென்றிருக்கிறார்.

இந்நிலையில் இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் மலையாள சீரியல்களில் நடித்து அதிகளவு ரசிகர்களைப் பெற்றவர்.

தமிழ் சீரியலில் நடிக்க இத கட்டாயம் பண்ணி தான் ஆகணும்..

அந்த வகையில் இவரிடம் பேசும் போது தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடிக்கின்ற அனுபவத்தை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பக்குவமாக பதிலளித்த இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம் என்பதை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் என்னவென்று கேட்ட போது தமிழ் சீரியல்களில் நடிக்கும் போது ஓவர் எக்ஸ்பிரஷனை வெளியிட வேண்டும். அதுவே மலையாள சினிமாக்களில் அப்படி கிடையாது. அது போல தான் சீரியல்களிலும் என்பதை எதார்த்தமாக கூறினார்.

மேலும் மலையாள சீரியல்களில் கதை இயல்பாக இருப்பதின் காரணத்தால் அதற்கு ஏற்ப முக பாவங்களை லைட்டாக செய்தாலே போதும். எனினும் அதுவே தமிழ் சீரியல்கள் என்றால் சற்று ஓவராக முகபாவனைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஓபனாக பேசிய சீரியல் நாயகி பிரவீனா..

தமிழ் சீரியல்களில் மகிழ்ச்சியான காட்சியை நடிக்க வேண்டும் என்றால் அதிக அளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அதுவே சோகமான காட்சிகள் என்றாலும் அது போல தான் சற்று ஓவராக நாம் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த வகையில் நான் ஒரு நடிகையாக இதை அட்ஜஸ்ட் பண்ணி தான் செய்ய வேண்டிய உள்ளது என்று சொன்னது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதனை அடுத்து மலையாள மற்றும் தமிழ் சீரியல்களுக்கு இடையே இருக்கக்கூடிய வித்தியாசத்தை மிகவும் சிறப்பான முறையில் ஒப்பிட்டு கூறிய பிரவீனாவின் பேச்சு தற்போது ரசிகர்களின் மத்தியில் வெளிப்பட்டு இருப்பதோடு அவர் சொல்லுவதில் உண்மை உள்ளதை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த விஷயத்தை இணையதள வாசிகள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version