தமிழ் சீரியலில் நடிக்க. அட்ஜெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்.. ஆனால்.. நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!

கேரளத்துப் பெண்ணான நடிகை பிரவீனா தமிழ் சீரியல்களில் நடித்ததின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்த நடிகைகளில் ஒருவரான இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை பிரவீனா..

எனினும் தமிழ் சினிமா கொடுக்காத பேமஸை சீரியல்களில் நடித்ததின் மூலம் இவர் பெற்றிருக்கிறார் என்பது உண்மை தான். தமிழ் சினிமாவை பொருத்த வரை ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த கோமாளி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: கற்பு முக்கியம்.. ஆனால்.. பூனைக்கண் புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

இதனை அடுத்து தமிழில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் தனது கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.

திரைப்படங்களில் அதிக அளவு அம்மா, அத்தை கேரக்டர்களை செய்யக்கூடிய இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தெறி, சாமி 2, வெற்றிவேல் போன்ற படங்களில் துணை கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழ் சீரியலில் நடிக்க..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் தமிழ் சீரியல் பற்றி பேசும் போது மலையாள சீரியல்களை கம்பேர் செய்து இரண்டில் நடிக்கும் போது இவருக்கு எப்படி இருந்தது என்பதை மிக நேர்த்தியான முறையில் கூறி இருக்கிறார்.

தமிழில் இவர் ராஜா ராணி, மகாராசி, பிரியமானவள், இனியா போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது இனியா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இது போன்ற தமிழ் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்றால் ஓவர் ஆக்டிங் செய்து தான் ஆக வேண்டும். அதுவே மலையாளம் சீரியல்களில் கதை இயல்பாக இருக்கும் அதற்கு ஏற்ற முக பாவங்களை வெளிப்படுத்தினால் போதும். அது மிகவும் சிறப்பாக அமைந்து விடும்.

அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணுமா..

ஆனால் தமிழ் சீரியல்களில் அதிகமான முக பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும். ஏதாவது அதிர்ச்சியாக நடந்தால் முகத்தை மிகவும் அதிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் அதிகப்படியான மகிழ்ச்சியாக இருப்பது போல முக பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். நானும் மலையாள சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நடிக்கும் சீரியல்கள் மிகவும் சாதாரணமாகவும் வெகு ஜன மக்களின் வாழ்க்கை முறை போலவும் இருக்கும்.

இதையும் படிங்க: புன்னகையரசி சினேகாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

ஆனால் தமிழ் சீரியல்கள் அப்படி கிடையாது. ஒரு நடிகையாக நான் இதை அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும் என்று பிரபல சீரியல் நடிகை பிரவீனா கூறி இருக்கக்கூடிய கருத்தைக் கேட்டு தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

எனினும் அவர் கூறிய கூற்றில் உண்மை உள்ளது என்பதை தமிழக ரசிகர்கள் ஒப்புக்கொண்டுள்ளதால் எதார்த்தமான கதையம்சம் உள்ள திரைக்கதைகளை எப்போது எடுக்கிறார்களோ அப்போது தான் அந்த மலையாள படங்களில் இருக்கும் யதார்த்தம் தமிழ் படங்களிலும் கிடைக்கும்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version