ப்பா.. வேற லெவல்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரவீனா..!

சின்னத்திரை நடிகையான நடிகை பிரவீனா மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது. இவர் ஏசியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தேவி மகாத்மியத்தில் நடித்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை பிரவீனா..

கௌரி திரைப்படத்தை அடுத்து ராஜதந்திரம், கிளி ஊஞ்சல் போன்ற படங்களில் நடித்த இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

தமிழில் ஹீரோயினியாக நடிக்காவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று அம்மாவாக அக்காவாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள், மகராசி தொடர்களில் நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி பகுதி இரண்டில் நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் ஏசியாநெட், அமுதா தொலைக்காட்சி, சூர்யா தொலைக்காட்சி, கைரளி தொலைக்காட்சி போன்றவற்றில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிக அளவு உள்ளது.

1998-ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை அக்னிசாட்சி என்ற படத்திற்கும் அதே விருதை 2008-ஆம் ஆண்டும் பெற்றிருக்கிறார்.

மேலும் சிறந்த பின்னணி குரல் கலைஞராக 2010 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டும் இதே பின்னணி குரல் கலைஞர் விருதை வென்றவர்.

அத்தோடு சிறந்த நடிகைக்கான ஏசியநெட் விருதுகளை 2005, 2011, 2018 என மூன்று முறை வென்று இருக்கக்கூடிய இவர் கேரள திரைப்பட சங்க விருதுகளையும் பெற்றிருப்பது 2018-ல் சன் குடும்ப விருதுகளை பிரியமானவள் சீரியல் நடித்ததற்காக பெற்றிருக்கிறார்.

டிரான்ஸ்பரென்ட் புடவையில்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை பிரவீனா தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையை கட்டிக் கொண்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வேறு இடங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து திணறி வரக்கூடிய இளசுகள் அனைத்தும் அட இது நம்ம பிரவீனாவா? என்று ஆச்சரிய குறியோடு புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

ட்ரெடிஷனல் புடவையில் மேனியின் அழகை பக்குவமாக காட்டி இருக்கும் நடிகை பிரவீனாவின் ஸ்டில் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

பார்க்கும் போதே மனதில் பல்வேறு எண்ணங்களை தூண்டி விடக் கூடிய அளவு ஒவ்வொரு புகைப்படத்தின் தரம் உள்ளதால் சேலையில வீடு கட்டவா? சேர்ந்து வசிக்க என்ற பாடல் வரிகளை பாடி ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் இந்த கோடையில் புடவையில் ஆளை அசத்தியிருக்கும் நடிகை பிரவீனாவின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சம்மர் விருந்தாக மாறி உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவில் லைக் கொடுப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் தருவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version