ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரபல சீரியல் நடிகை பிரவீனா. பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கும் பிரவீனா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
மலையாள நடிகை சீரியலில் அம்மா அத்தை உள்ளிட்ட குணசத்திர வேடங்களை ஏற்று நடத்தி வருகிறார். சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.
அந்த வகையில் கோமாளி வீட்டுல விசேஷம் நடிகர் விக்ரமின் சாமி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது என்ற விருதையும் கேரள அரசிடம் பெற்றிருக்கிறார் நடிகை பிரவீனா.
சமீபத்தில் சைபர் கிரைம் போலீசில் பகீர் புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார். இவர் இவர் கூறிய புகாரானது என்னுடைய சமூக வலைதளக்கணக்கில் என்னுடைய இன்பாக்ஸ்க்கு மோசமாக சித்தரிக்கப்பட்ட தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள் என்று புகார் கொடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போலீசார் இரண்டு கல்லூரி மாணவர்களை லபக்கினார்கள். தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது அமர்ந்த இடத்திலேயே பரதநாட்டியம் நடனமாடி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.