தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணித்தான் ஆகணும்.. ரகசியம் உடைத்த நடிகை பிரவீனா..!

சீரியலில் நடித்தாலும், சினிமா நடிகைகளை போலவே மிகப்பெரிய புகழும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறது. அதுவும் சினிமாவிலும் நுழைய அது வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஏனெனில் சினிமாவில் நுழைய சின்னத்திரை வழி ஏற்படுத்தி தருகிறது.

பிரவீனா

நடிகை பிரவீனா கேரளாவில் இருந்து தமிழில் அறிமுகமானவர். இவர் ஒரு தொலைக்காட்சி நடிகை மற்றும் பின்னணி குரல் கலைஞர். ஏசியாநெட் தொலைக்காட்சியில் சக்தி பார்வதி சீரியலில் தேவி கதாபாத்திரத்தில் நன்கு அறியப்பட்டவர். இது இந்தியாவின் மிக நீண்ட புராண தொடராகும்.

ஏகப்பட்ட விருதுகள்

பிரவீனா பல மலையாள படங்கள் மற்றும் பல முன்னணி டிவி சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் கேரள அரசின் சிறந்த நடிகை விருது( அக்னி சாட்சி) அதே போல் இரண்டாவது சிறந்த நடிகை (ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும்) சிறந்த பின்னணி குரல் கலைஞர் (எலக்ட்ரா) சிறந்த பின்னணி குழு கலைஞர் (இவன் மேகரூபன்) அதேபோல் மேகம் என்ற சீரியலை நடித்ததற்காக சிறந்த நடிகை விருது, தேவி மகாத்யம் என்ற மிகப் பிரபலமான நடிகை விருது, கஸ்தூரிமான் சிறந்த கதாபாத்திர நடிகை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

சன் குடும்பம் விருதுகளில், பிரியமானவள் சீரியலில், சிறந்த தாய்க்கான சன் குடும்பம் விருது பெற்றார்.

தமிழில் பல படங்களில்…

தமிழில் பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்திருக்கிறார் பிரவீனா. குறிப்பாக பெங்களூர் டேஸ், வெற்றிவேல், தீரன் அதிகாரம் 1, சாமி 2, கோமாளி, டெடி போன்ற படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார்.

அது மட்டும் இன்றி மலையாளத்தில் நிறைய படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

தமிழில் நம்ம குடும்பம், மகாராணி, ஆதிபராசக்தி, பிரியமானவள், மகராசி, ராஜா ராணி போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார். அதேபோல் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சி, மகாராணி ( விஜய் தொலைக்காட்சி) சினேகஸ்பர்சம் போன்றவற்றில் தொகுப்பாளராக பிரவீனா பணிபுரிந்தவர்.

கணவர் மற்றும் மகள்

துபாயில் வங்கியாளராக பணியாற்றிய பிரமோத் என்பவரை, பிரவீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பிரவீனா கூறியதாவது,மலையாள சீரியல்களில் கதை இயல்பாக இருக்கும். அதற்கு ஏற்றார் முக பாவனைகளை செய்தால் மட்டும் போதும். ஆனால் அதுவே தமிழில் ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும்.

அதிர்ச்சியாக இருப்பது போல்…

அதாவது தமிழ் சீரியல்களில் அதிக முக பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக அதிர்ச்சியாக எதுவும் நடந்தால், மிகவும் அதிர்ச்சியாக இருப்பது போன்றும் மகிழ்ச்சியாக ஏதாவது நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் முகபாவனைகளை வைக்க வேண்டும்.

அட்ஜஸ்ட்மென்ட்

மேலும் இதையெல்லாம் தமிழ் சீரியல்களில் அட்ஜஸ்ட் பண்ணி தான் நடிக்க வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணித்தான் ஆகணும் என்று ஓவர் ஆக்டிங் குறித்து ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை பிரவீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version