மலையாள நடிகையான நடிகை பிரவீனா ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவியாக நடித்ததின் மூலம் பலர் மத்தியிலும் பிரபலமானார்.
இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் சின்ன, சின்ன வேடங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களை செய்து அசத்தி வருபவர். மேலும் இவர் கேரள அரசின் திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார்.
நடிகை பிரவீனா..
பெரிய திரையை பொருத்த வரை 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான இவர் 1998 – ஆம் ஆண்டு அக்னி சாட்சி மற்றும் ஒரு பெண்ணும் ரெண்டுணும் படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் திரைப்பட விருதையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.
இவர் சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி குரல் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். மேலும் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததை அடுத்து விருதுகளையும் வென்று இருக்கிறார்.
சின்னத்திரையில் மழவில் மனோரமா தொலைக்காட்சியில் சுவப்னம், மேகம் மவுனம் ஆகிய தொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் கைரளி தொலைக்காட்சியில் மம்மி அண்ட் மீ ஏசியன் நெட்டில் காமெடி ஸ்டார்ஸ், ஸ்டார் சிங்கர் ஒலிக்க பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்திருக்கிறார்.
காய்த் தொங்கும் பலாபழம்..
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வரக் கூடிய இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பலா மரம் காய்ந்து தொங்கி இருப்பதை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
இந்த மரம் முழுவதும் அதிக அளவு காய் பிடித்துள்ளது. மேலும் அந்த காய் எவ்வாறு மூத்து உள்ளது என்பதை மிக அழகிய மலையாள மொழியில் பேசி பகிர்ந்திருக்கிறார்.
கையில் தூக்கிய படி பிரவீனா..
பொதுவாகவே பலாமரத்தில் இருக்கும் பலா காய்கள் நன்கு முத்திய நிலையில் நன்கு விளைந்து இருக்க வேண்டும் என்றால் அதன் முட்கள் பரந்து இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே கால் மூத்து உள்ளது என்று அர்த்தம்.
இந்த விஷயத்தை தான் தனது அழகிய மலையாள மொழியில் பகிர்ந்திருக்கிறார். மேலும் மூத்திருக்கும் ஒரு பலாக்காயை வெட்டி சமைப்பதற்காக தன் தாயிடம் கொடுக்க இருப்பதாக கூறிய இவர் அந்த பலாக்காயை தட்டி அதில் வரும் ஓசை எப்படி உள்ளது என்பதையும் காட்டி இருக்கிறார்.
இந்த வீடியோவானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு பலாக்காய் முற்றிய நிலையில் எப்படி பறிக்க வேண்டும் என்ற விஷயத்தை பலருக்கும் கற்றுத் தந்துள்ளது.
மேலும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.