தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகராக திகழும் விஜயகுமார் நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!
அதுமட்டுமில்லாமல் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இன்று வரை இளமையோடு காட்சியளிக்கும் இவர் அதே வைப்பில் இருப்பதால் தான் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடி அசத்தினார்.
நடிகை வனிதா விஜயகுமார்..
இவரின் இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்தவர் வனிதா விஜயகுமார், நடுவில் பிறந்தவர் ப்ரீத்தா விஜயகுமார், அடுத்ததாக ஸ்ரீதேவி விஜயகுமார் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வகையில் திரை உலகில் களம் இறங்கி சொல்லிக் கொள்ளும் படியான வெற்றிகளை தர முடியாத வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ வான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்திய விஷயங்கள் இன்று அளவும் மக்களால் மறக்க முடியவில்லை எனக் கூறலாம். பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் உள்ளது என்பதை மறந்து இவர் நடந்து கொண்ட முறைகள் அனைத்தும் முகம் சுளிக்க வைத்தது.
அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சக போட்டியாளர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் இவர் நடந்து கொண்ட விதம் இவற்றைப் பற்றி இவர் குடும்பத்தாரே விமர்சனம் செய்து இருப்பது இவருக்கு பொருத்த பின்னடைவை தந்தது.
தங்கை ப்ரீத்தா விஜயகுமார்..
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை வனிதா நடந்து கொண்ட முறைகளை பார்த்து அவரது தங்கை ப்ரீத்தா விஜயகுமார் இவள அக்கான்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு என்று ஓபனாக பேசியிருக்கக் கூடிய விஷயங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் வீட்டில் இருக்கும் போதே அனைவருடன் ஒற்றுமையோடு இல்லாமல் கடுகடு சிடுசிடு என்று இருக்கக்கூடிய இவர் வீட்டில் பிரச்சனைகள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.
வீட்டிலேயே இப்படி என்றால் பிக் பாஸ் வீட்டை சும்மா விடுவாரா? என்ற நிலையில் வனிதா பற்றி ப்ரீத்தா கூறியது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
அக்கான்னு சொல்லவே வெட்கமா இருக்கு..
மேலும் இவரது மகனும் தனது அம்மா பிக் பாஸ் வீட்டில் விளையாடும் போது அம்மாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அவரை உற்சாகப்படுத்த நினைத்த போதும் அவரது திருவிளையாடல்களை பார்த்து கப்சிப் என்று ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இவள அக்கா னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு என தங்கை ப்ரீத்தா விஜயகுமார் கூறியதாக தகவல்கள் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.
எனினும் இது குறித்த உண்மை தன்மை என்ன என்று எவருக்கும் தெரியவில்லை. ப்ரீத்தா விஜயகுமார் அல்லது வனிதா விஜயகுமார் இவர்களில் யாராவது ஒருவர் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று சொன்னால் மட்டும் தான் உண்மை என்ன என்ற நிலவரம் தெரியவரும்.
எனினும் இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
இதையும் படிங்க: Varalakshmi கணவரின் முதல் மனைவி Kavita யார் தெரியுமா..? அடக்கொடுமைய.. என்னப்பா சொல்ட்றீங்க..