திருமணதிற்கு முன்பே கர்ப்பம்.. மாமனாருடன் சண்டை.. முதன் முறையாக வாய் திறந்த மஞ்சிமா மோகன்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் ஹீரோயின் ஆக வலம் வந்தார்.

மஞ்சிமா மோகன்:

குறிப்பாக 1990ல் இறுதியிலும் 2000 கட்டத்தில் துவக்கத்திலும் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் மஞ்சுமா மோகன்.

சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் தனக்கு நம்பிக்கை இல்லை என மஞ்சுமா மோகன் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் தொடர்ந்து தனது கனவு மற்றும் இலட்சியத்திற்காக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார்.

அதன் பிறகு அவர் தமிழில் முதன்முதலில் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டதோடு மஞ்சுமா மோகன் நடிப்பு பெருவாரியான ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஹீரோயினாக அறிமுகம்:

அவரது பப்ளி அழகான தோற்றமும், அவரது நடிப்பும், புல்லட்டில் சிம்புவுடன் சேர்ந்து பயணிக்கும் போதும் அந்த ஜோடி பொருத்தம் மிக சூப்பராக இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்தனர்.

முதல் படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தால் நடிகை மஞ்சுமா மோகனுக்கு அந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக கதாநாயகி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் அதை தொடர்ந்து. இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம், துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் ,எஃப் ஐ ஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தேவராட்டம் திரைப்படத்தில் நடித்த போதுதான் படத்தில் ஹீரோவாக அவருடன் நடித்த நடிகர் கௌதம் கார்த்தி மீது காதல் வயப்பட்டார்.

பின்னர் சில வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக மஞ்சுமா மோகனின் உடல் பருமனை வைத்து பலர் விமர்சித்தனர் .

அதுமட்டுமில்லாமல் இவர் கெளதம் கார்த்திக்கு ஏற்ற பொருத்தமான ஜோடியே இல்லை என பலரும் மோசமாக விமர்சித்து பாடி ஷேமிங் செய்தனர்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்?

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மோசமான அனுபவங்களை குறித்தும். நெட்டிசன்ஸ்களால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதாவது, நான் திருமணத்திற்கு முன்னே கர்ப்பமாக இருந்தேன். திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமே இல்லை என்ற பொய்யான செய்திகள் பரவியது.

இந்த செய்தி என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிகவும் காயப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் நான் கௌதம் கார்த்திக்கு ஏற்ற ஜோடியே இல்லை என பல பேர் என்னுடைய உடலை வைத்து மோசமாக விமர்சித்திருந்தது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு .

சோசியல் மீடியாவில் திருமணமான ஜோடிகள் திருமண புகைப்படங்கள் வெளியிடுவதை பார்த்து. எனக்கும் அவர்களைப் போன்று ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட வேண்டும் அப்படின்னு தோணும்.

ஆனால், எங்களுடைய திருமண அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்தே எங்களை மோசமாக பங்கமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது. அதனால் நான் இப்போது பேசும்போது கூட கவனித்து தான் பேசுகிறேன் என மஞ்சிமா மோகன் மிகுந்த வேதனையோடு தெரிவித்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version