1000 சவரன் நகை.. 3 பங்களா.. 48 வயதில் பிரேம்ஜி வாங்கிய வரதட்சனை..!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பிரபல காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் பிரேம்ஜி அமரன் .

இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த நடிகர் , இசையமைப்பாளர் , பாடல் ஆசிரியர், பாடகர் இப்படி பன்முகத் திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

நடிகர் பிரேம்ஜி அமரன்:

பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரனின் மூத்த அண்ணன் தான் வெங்கட் பிரபு .

வெங்கட் பிரபு திரைப்பட இயக்குனராக இருந்தவர் , பிரேம்ஜி நடிகர், பாடகராக இருந்து வருகிறார். பிரேம்ஜி அமரன் 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார்.

கடைசிவரை பிரேம்ஜி திருமணமே செய்து கொள்ளவே மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென சேலத்தை சேர்ந்த “இந்து” என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

மணப்பெண் இந்து பேங்க் ஆபீஸராக இருந்து வருகிறார். இந்த காதலை முதன் முதலில் சொன்னதே மனைவி இந்து தானாம்.

Facebook மற்றும் WhatsApp மூலமாக அவர்களது நட்பு ஆரம்பித்திருக்கிறது. முதலில் நட்பாக ஆரம்பித்து பின்னர் அது காதலாக மாறியதாம்.

Facebook’ல் மலர்ந்த காதல்:

இந்நிலையில் பிரேம்ஜி மீது ஏற்பட்ட காதல் குறித்து பேசி இருக்கும் மனைவி இந்து நான் தான் முதன்முதலில் அவரை காதலித்தேன்.

ஆனால், அவருக்கு வயது 47 ஆகிவிட்டது என்பதை பார்த்து கொஞ்சம் யோசித்தேன். ஆனால் அவர் பார்ப்பதற்கு அப்படி வயதானவர் போன்று தோன்றவில்லை.

அதுமட்டுமில்லாமல் அவருடன் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என இந்து கூறியிருந்தார் .

இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவீட்டு உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் .

கூடிய விரைவில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவியது .

கல்யாணத்தில் ரொமான்ஸ்:

47 வயதில் திருமணம் செய்து கொள்கிறார் பிரேம்ஜி என்றால் அவர் மிகவும் சோகமாக இருப்பார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு மனைவியை கட்டியணைத்து தாலி கட்டும்போது முத்தம் கொடுத்து போட்டோக்கு போஸ் கொடுத்தார்.

அத்துடன் சிரித்துக் கொண்டே காமெடியாக போஸ் கொடுத்தது எல்லாம் அங்க இருப்பவர்களை பார்த்து ரசிக்க வைத்ததாம்.

பிரேம்ஜியின் இந்த நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் 90ஸ் கிட்ஸ்க்கும் கல்யாணம் ஆகும் டா என கூறி வருவதோடு இந்த மனுஷன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரேம்ஜி அமரனின் திருமணத்தை குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஆன பயில்வான் ரங்கநாதன்,

பிரேம்ஜியின் திருமணம் பிராமண முறைப்படி நடைபெற்றதாக கூறி சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த திருமணத்தில் பிரேம்ஜிக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணை குறித்து அதிரவைத்துள்ளார் .

வியப்பளிக்கும் வரதட்சணை:

1000ம் சவரன் தங்க நகைகள் , 3 பங்களா வீடு, சொகுசு கார் உள்ளிட்டவை பிரேம்ஜி வரதட்சணையாக வாங்கி இருப்பதாக பயில்வான் கூறி அதிர வைத்திருக்கிறார்.

இந்த வயசில் திருமணம் செய்யும் பிரேம்ஜிக்கு இவ்வளவு வரதட்சணையோடு கூடிய அழகான மணப்பெண்ணும் கிடைத்திருக்கிறாரே என ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version