ஆடிய ஆட்டம் என்ன..? பிரேம்ஜி வெளியிட்ட வீடியோ.. சிம்பு பாத்தா கல்யாணமே பண்ண மாட்டாரே..!

தொடர்ந்து தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகராக நடித்து வருபவர் நடிகர் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக இவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதிகபட்சம் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் பிரேம்ஜி இருப்பதை பார்க்க முடியும். பிரேம்ஜி மிகவும் ஜாலியான ஒரு கேரக்டர் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கு நட்பு வட்டாரம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் வெகு நாட்களாக சிங்கிளாக தனது காலத்தை கழித்து வந்தார் ப்ரேம்ஜி. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்து என்கிற பெண்ணை இவர் திருமணம் செய்தார். பிரேம்ஜி திருமணம் செய்ய போகிறார் என்பது அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியது.

பிரேம்ஜி திருமணம்:

கடைசி வரை இவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றுதான் அதிகமாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் அவரது ரசிகையான இந்து இன்ஸ்டாகிராம் மூலமாக பிரேம்ஜிக்கு பழக்கமான பிறகு அந்த காதலே திருமணத்திற்கு கொண்டு சென்றது.

திருத்தணியில் இவர்கள் இருவருக்கும் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. அதனால் அந்த திருமணத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் இந்த சண்டையின் காரணமாக அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று பேச்சு இருந்தது.

இதனை தொடர்ந்து ஒரு வதந்தியும் பரவ துவங்கியது. ஆனால் மறுநாள் திருமண வரவேற்பை சென்னையில் மிகவும் கோலாகலமாக நடத்தினார்கள் அந்த வரவேற்பில் இளையராஜா கலந்து கொண்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சமீபத்திய வீடியோக்கள்:

திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ப்ரேம்ஜி. ஹனிமூன் எல்லாம் சென்று வந்தார் 45 வயதில் திருமணம் செய்து இருக்கிறார் பிரேம்ஜி. பிரேம்ஜியின் மாமியாருக்கும் பிரேம்ஜிக்கும் ஒரே வயது என்று கூறப்படுகிறது.

அப்படி இருந்தும் கூட செல்வாக்குமிக்க நடிகர் என்பதால் அவருக்கு எளிதாக திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக பிரேம்ஜி வெளியிடும் வீடியோக்கள் எல்லாம் மிகவும் கவலை கொடுக்கும் வீடியோக்களாக இருக்கின்றனவாம்.

அவரது வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரது மனைவி அவரையே செய்ய சொல்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த விஷயங்களை எல்லாம் வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார் இதனை பார்த்த நெட்டிசன்கள் ”ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வம் என்ன” என்கிற பாடலை போட்டு கோவாவிற்கு பார்ட்டிக்கு சென்ற சிங்கிள் பிரேம்ஜி இப்பொழுது மனைவியின் துணிகளை காய போடும் நிலைக்கு வந்து விட்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கு நடுவே சிம்புவின் ரசிகர்கள் ஏற்கனவே சிம்பு  திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த மாதிரி நீங்கள் வீடியோக்களை வெளியிட்டால் தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனவே இந்த மாதிரி வீடியோக்களை வெளியிடாதீர்கள் என்று பிரேம்ஜிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version