கங்கை அமரனின் இரண்டு மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு இயக்குநராகி விட்டார். பிரேம்ஜி நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார்.
மங்காத்தா, கோவா படங்களை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மாநாடு. சிம்பு நாயகனாக, எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த இந்த படமும் டைம் டிராவல் கதைக்கருவை கொண்டதுதான். படத்தில் ஒருநாளில் நடக்கும் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப சின்ன சின்ன மாற்றங்களுடன் வருவதுதான் கதை. இது படம் பார்த்த பலருக்கும் புரியாது, அந்த மாதிரியான ஒரு கதையை இயக்கி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசிய வீடியோ ஷாட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, மாநாடு படம் வெளியானது. பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்தவர்களிடம் மீடியா தரப்பில் ரிவ்யூ கேட்டுள்ளனர். அவர்கள் படம் குறித்த தங்களது கருத்துகளை கூறுவது வழக்கமாக நடக்கிறது.
அப்போது ஒரு தியேட்டர் முன் நின்ற ரசிகர் ஒருவர் படம் குறித்து கொந்தளித்து போய் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த படம் சுத்தமாக எனக்கு புரியவில்லை, என்னங்க படம் இது. வந்த காட்சியே திரும்ப திரும்ப வந்துகிட்டு இருக்குது. இப்படி ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. பெரிய தலைவலியா இருக்குது, என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
இதை பார்த்த பிரேம்ஜி அதை அப்படியே கட் செய்து எடுத்து, எக்ஸ் வலைதளத்தில் தனது அண்ணனுக்கு டேக் செய்கிறார். இதை பார்த்தவுடன் மற்றவர்களாக கோபம்தான் வரும். தம்பியை கண்டபடி திட்டி அந்த பதிவை உடனே டெலீட் செய்திருப்பார்கள். ஆனால் வெங்கட்பிரபு கோபமின்றி அதற்கு ரிப்ளை செய்திருக்கிறார்.
அந்த பதிவுக்கு பதிலளித்த வெங்கட்பிரபு, ஓகே அவருக்கு பிடிக்கலை போலிருக்குது, என்று அதில் கூறியிருப்பார் என்று அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார் செய்யாறு பாலு. இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படமும் அதே டைம் டிராவல் கதை படம்தான் என்பதும் மிகவும் கவனிக்கத்தக்கது. இனி இந்த படத்துக்கும் எதிர்மறையான விமர்சனம் வந்தாலும் இப்படியே பிரேம்ஜி, தன் அண்ணனுக்கு டேக் செய்வாரா, என்பது கோட் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துவிடும்.