ஐஸ்வர்யா ராய் திடீர் விவாகரத்து..! இனி நீ எனக்கு தேவை இல்ல..!

நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போகிறது என்பதுதான் பாலிவுட் பக்கம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே ஏகப்பட்ட விவாகரத்து பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தற்சமயம் பாலிவுட்டிலும் இந்த பிரச்சனை துவங்கியிருக்கிறது.

இத்தனைக்கும் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாராயும் பல காலங்கள் நல்லபடியாக வாழ்ந்து வந்த ஜோடிகள் ஆவார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்திலேயே நிறைய பிரச்சனைகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

விவாகரத்து பிரச்சனை:

இதுக்குறித்து சமீபத்தில் அம்பானியின் திருமணத்தில் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்ட பொழுது இந்த சர்ச்சை இன்னும் அதிகமாக பேசப்பட்டது. இது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறும் பொழுது அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாகவே இருக்கிறது.

ஏனெனில் ஆரம்பத்தில் இருந்து ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மாமியாரான ஜெயாபச்சனுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வந்தன. அதனால்தான் அதற்கு பிறகு அபிஷேக் பச்சனுடன் தனியாக வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

அவ்வளவு பெரிய வீடு கட்டி இருக்கும் பொழுதும் கூட ஐஸ்வர்யா ராய் அந்த வீட்டில் இருக்கவில்லை. அதற்குப் பிறகு தற்சமயம் அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கூட பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

சமீப காலமாகவே இருந்து வரும் பிரச்சனை:

இதனால் சமீப காலமாக அவர்கள் செல்லும் விழாக்களுக்கு எல்லாம் ஐஸ்வர்யாராய் தனியாகவும் அபிஷேக் பச்சன் தனியாகவும் சென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த அம்பானியின் வீட்டு திருமண விசேஷத்திற்கு கூட அப்படிதான் இவர்கள் இருவரும் வந்திருந்தனர்.

மேலும் ஐஸ்வர்யாராய் ஹிந்தியில் பிரபல நடிகையான ரேகாவிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஏற்கனவே நடிகை ரேகாவிற்கும் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அப்படி இருக்கும் பொழுது எதற்காக இப்படி செய்கிறார் என்று கேள்வி வருகிறது.

அதே போல விவாகரத்து குறித்து ஒரு எழுத்தாளர் போட்ட பதிவிற்கு லைக் கொடுத்து இருந்தார் அபிஷேக் பச்சன். இதுவும் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு நடுவே அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஐஸ்வர்யா ராய் வந்தபோது அவர் சல்மான் கானோடு சேர்ந்து புகைப்படம் எடுத்ததாக ஒரு போலி புகைப்படத்தை வைரல் ஆக்கினர்.

இது ஐஸ்வர்யாராய்க்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு குழந்தைக்கு தாயான என்னை பற்றி இப்படி தவறான அவதூறுகளை பரப்பாதீர்கள் என்று இது குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தார் ஐஸ்வர்யா ராய். இதனால் சமீபகாலமாக இந்த விஷயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா என்பது அவர்களே வெளிப்படையாக சொன்னால் மட்டுமே உறுதியா தெரியும் என்று கூறுகிறார் சபிதா ஜோசப்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version