உள்ளாடை தெரிய.. அரைகுறை ஆடை.. கடுப்பில் சூர்யா.. கதறும் சிவகுமார்.. குடும்ப மானமே போச்சு..

சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஜோதிகா குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆனால் சிவகுமாரை பொறுத்தவரை இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் கிடையாது என்று அப்போது முதலே பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி அங்கேயே தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

அரைகுறை ஆடை

சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இருந்த பிரச்சனையின் வெளிப்பாடாக நடந்த நிகழ்வுதான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் ஜோதிகா இதுக்குறித்து பேட்டியில் கூறும்போது கொரோனா சமயத்தில் எனது பெற்றோர்களை மும்பைக்கு சென்று பார்ப்பது எனக்கு கடினமான விஷயமாக மாறிவிட்டது.

எனவே அவர்களை பார்த்துக் கொள்வதற்கு அங்கு ஒரு வீடு இருந்தால் எளிதாக இருக்கும் என்று வீடு வாங்கினேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிகா மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து ஃபிலிம் பேர் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இதற்கு முன்பு திருமணம் ஆனதிலிருந்து ஜோதிகா கவர்ச்சி ஆடைகளே அணிவது கிடையாது. மேலும் சிவகுமாருக்கும் சூர்யாவிற்கும் கூட இந்த விஷயம் சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

கடுப்பில் சூர்யா

இந்த நிலையில் இருந்த பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சில விளக்கங்களை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சிவகுமார் ஒரு சாதாரண ஓவியக் கல்லூரி மாணவனாக இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிகர் ஆக வந்தவர்.

அந்த காலகட்டத்தில் இருந்து அவருக்கென்று ஒரு கோடு போட்டு அதில் வாழ்ந்து வருபவர் சிவகுமார். அவருக்கு சினிமா எவ்வளவு மோசமானது என்பது தெரியும். சொல்ல போனால் சிவகுமாருக்கு தனது குடும்பத்தை சினிமாவிற்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையே இருந்தது கிடையாது.

கதறும் சிவகுமார்

ஏனெனில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் இருந்த நடிகர் சந்திரபாபு சினிமாவால் எவ்வளவு ஒரு மோசமான நிலைக்கு சென்றார் என்பது சிவகுமாருக்கு தெரியும். அதே போல மிக இளம் வயதிலேயே சிவகுமார் சினிமாவிற்கு வந்தாலும் கூட அவரை குறித்து எந்த ஒரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் கிடையவே கிடையாது.

அந்த அளவிற்கு ஒழுக்கத்தை பின்பற்ற கூடியவர் சிவகுமார். அதே காலகட்டத்தில் இருந்த ஜெமினி கணேசன் சாகும் வரையில் எவ்வளவு காதலிகளை வைத்திருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். சிவகுமாரும் நினைத்திருந்தால் அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்க முடியும் ஆனால் சிவகுமார் திருமண விஷயத்தில் கூட தனது பெற்றோரை தான் முடிவு எடுக்க விட்டார்.

தனது பெற்றோர் பார்த்த கிராமத்து பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார் சிவகுமார். என்னதான் சினிமாவில் இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனை போலவே இருந்து வந்தார் சிவகுமார் என்பதால் தனது மருமகள் இப்படியான ஒரு விஷயங்களை செய்வதெல்லாம் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சிவகுமார் பக்கம் இருக்கும் நியாயங்களை விவரிக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version