கண்ணீர் அல்ல.. ரத்தம் வந்தும் கூட விடாமல் நயன்தாராவை வேட்டையாடிய முக்கிய புள்ளிகள்..! – விளாசும் பிரபலம்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். பிரபலங்களுக்கு இடையே காதல் என்பது சினிமாவில் சகஜமான விஷயமாக இருந்து வருகிறது.

அப்படியே காதல் விஷயங்களில் அதிகமாக சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதலே நடிகை நயன்தாரா குறித்து நிறைய காதல் கிசுகிசுக்கள் உண்டு. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

நயன்தாரா வாழ்க்கை

தற்போது வாழ்க்கை எந்த ஒரு சிக்கலும் இன்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர் கடந்து வந்த பாதை குறித்து சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல சினிமா பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

அதில் சினிமாவில் நடிகை நயன்தாரா கடந்து வந்த பாதை ஒன்றும் மலர் பாதை கிடையாது. ஆனால் அவரை பற்றி தான் பொதுவெளியில் மோசமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பெண்ணாக எவ்வளவு பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறார் என்பதை மேலோட்டமாக பார்த்தாலே அவர் எந்த அளவுக்கு திடமான ஒரு பெண் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நடிகை நயன்தாரா பல நடிகர்களால் ஏமாற்றப்பட்டார். நடிகர் மோகன்லால், பிரபு தேவா, சிம்பு இப்படி பலரால் ஏமாற்றப்பட்டார். குறிப்பாக நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். நடிகர் பிரபுதேவாவை காதலித்து பிரிந்தார் இவ்வளவுதான் நமக்கு தெரியும்.

தொடர் காதல் தோல்வி:

ஆனால் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள நடிகை நயன்தாரா கண்ணீரல்ல ரத்தம் சிந்தி கூட அவர்கள் மனம் இறங்கவில்லை நயன்தாராவை ஒரு கில்லு கீரையாக பயன்படுத்திவிட்டு தங்களுடைய தேவை முடிந்து விட்டதும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

சிம்பு,நயன்தாரா விவகாரம் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் பிரபு தேவா நயன்தாராவுக்காக தன்னுடைய குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு வந்தார். ஆனால், நடிகர் ஷாருக்கான் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் வடநாட்டுக்கு சென்றார் பிரபு தேவா.

சென்ற இடத்தில் அங்கே ஒரு நடிகையுடன் காதலில் விழுந்து விட்டார். நடிகை நயன்தாராவை கழட்டி விட்டு விட்டார். இந்த விஷயம் தெரியாமலேயே பிரபுதேவாவுக்காக காத்திருந்து காத்திருந்து கடைசியாக உண்மை தெரிந்த பிறகு கொடுமையான வேதனையை அனுபவித்த நடிகை நயன்தாரா அதன் பிறகு மீண்டும் தன்னை சினிமாவில் ஈடுபடுத்திக் கொண்டு தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இப்படி நயன்தாராவை ஏமாற்றிய நடிகர்கள் எல்லாம் சினிமாவில் இன்றைக்கு முக்கிய புள்ளிகள். ஆனால், திட்டுவதற்கு நடிகை நயன்தாரா பெயரை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள் இது தவறு என பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version