கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான மீனா குறித்த சர்ச்சைதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீனா சிறு வயது முதலே தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த நடிகை ஆவார்.
பல முன்னணி நடிகர்களுடன் குழந்தை கதாபாத்திரமாகவே இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகுதான் அவர் இளம் நடிகையாக அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான ஒரு நடிகையாக மீனா பார்க்கப்படுகிறார்.
மீனா சர்ச்சை:
தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தார் மீனா. ரஜினிக்கு பிறகு வந்த அஜித் மாதிரியான இளம் நடிகர்களுடனும் தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்தவர் மீனா. இந்த நிலையில் மீனாவிற்கும் பிரபல அரசியல்வாதியான எல்.முருகனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு வதந்தி கிளம்பியது.
திருச்சி சிவா என்பவர்தான் இந்த வதந்தியை முதன் முதலாக கிளப்பிவிட்டார். இதனை தொடர்ந்து இதுக்குறித்து அதிகமாக பேச்சுக்கள் பேசப்பட துவங்கின. முக்கியமாக மீனா எல்.முருகன் நடத்திய பொங்கல் விழாவிற்கு சென்றிருந்தார்.
அந்த விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்திருந்தார். ஆனால் மீனாவை பொருத்தவரை அவருக்கு பா.ஜ.க குறித்த எந்த ஒரு தொடர்பும் கிடையாது. பாஜக கட்சியிலும் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை எனும் பொழுது எதற்காக அவர் அந்த விழாவிற்கு செல்ல வேண்டும் என்பதுதான் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கேள்வியாக இருந்தது.
பத்திரிக்கையாளர் விளக்கம்:
இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தற்சமயம் குரல் கொடுத்திருக்கிறார் பத்திரிகையாளர் அந்தணன். பத்திரிகையாளர் அந்தணன் தமிழ் சினிமா துறையில் பத்திரிகையாளராக பல காலங்களாக இருந்து வருபவராக இருக்கிறார்.
இவர் கூறும் பொழுது யாருமே மீனா குறித்த எந்த ஒரு விஷயத்தையும் நேரில் பார்க்கவில்லை என்னும்போது அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. யாரோ ஒரு அரசியல் பிரமுகர் போகிறபோக்கில் ஏதோ ஒன்றை கொளுத்தி போட்டு விட்டு சென்று விட்டனர்.
அவருக்கு எல் முருகன் மீது இருந்த வெறுப்பின் காரணமாக இந்த மாதிரியான தப்பான விஷயத்தை பரப்பி விட்டார். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. சமீபத்தில்தான் மீனா அவருடைய கணவரை இழந்து வெகு நாட்களாக கவலையில் இருந்து வந்தார்.
இப்பொழுதுதான் கொஞ்சம் அதிலிருந்து மீண்டு இருக்கிறார். தொடர்ந்து இவர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு மீண்டும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். திருச்சி சிவா இது குறித்து ஆதாரத்தை வெளியிடுகிறேன் என்று கூறினாலும் கூட இப்பொழுது வரை அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை என்று கூறி இருக்கிறார் பத்திரிகையாளர் அந்தணன்.