பிரஷர் குக்கர் பராமரிப்பு முறைகள் என்னென்ன தெரிந்து கொள்ளலாமா?

இங்கு இருக்கும் வீடுகளில் பிரஷர் குக்கர் என்பது அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை என கூறலாம். மேலும் சமையல் செய்வதற்கு இந்த குக்கர் இருந்தால் மட்டும்தான் முடியும் என்ற அளவுக்கு இன்றைய தலைமுறை தனியாக சமைக்க தெரியாமல் குக்கரை நம்பித்தான் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த குக்கரை நீங்கள் சரியாக பராமரித்தால் மட்டுமே நீண்ட ஆயுள் நீடிக்கும்.அது மட்டுமல்லாமல் கேஸ் சிக்கனமாக செலவாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையில் நீங்கள் உங்கள் குக்கரை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள்.

குக்கர் பராமரிக்கும் முறை நீங்கள் சமையலை முடித்தவுடன் குக்கரில் இருக்கும் கேஸ்கட், விசில் போன்றவற்றை தனித்தனியாக எடுத்துவிட்டு கழுவி துடைத்து வைக்க வேண்டும். பிரஷ் கொண்டு விசிலை நீங்கள் சுத்தம் செய்வதின் மூலம் உணவுத் துணுக்குகள் அதனுள் இல்லாமல் இருக்கும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கேஸ் கட்டை மாற்றி விடுவது நல்லது இல்லை என்றால் அதிக அளவு கேஸ் விரயமாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தற்போது குக்கர்களின் காப்பர் பாட்டம், நான்ஸ்டிக் போன்ற குக்கர்கள் வந்துள்ளது. இதை அடுப்பில் அதிக நேரம் தீயை வைத்து பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துவதால் குக்கர் எளிதில் பழுதடையும். எனவே பழுது ஏற்படாமல் இருக்க பாத்திரங்களை அடுப்பில் வைக்கும் போது தீயை குறைத்து ஸ்விம்மில் வைப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து மூட வேண்டும். லூசாக இருந்தால் உடனே நீங்கள் அதை பராமரிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் குக்கரில் பொருத்தி இருக்கும் கைப்பிடிகள் லூசாக இருந்தால் மாதத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெயை ஊற்றி அந்த ஸ்க்ரூவில் இருக்கும் துருக்கலை நீக்கிவிட வேண்டும்.

மேற்குரிய இந்த கிப்ஸை நீங்கள் பாலோ செய்யும் போது உங்களது குக்கர் நீண்ட நாள் உழைப்பதோடு பேசும் சிக்கனமாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …