இந்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டு படங்கள் மட்டும் தான் வெளிவந்தது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரண்டு நடிகர்கள் திறமை உள்ளவர்கள் என்றுதான் கூறவேண்டும். கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தான் வெளிவந்தது.
இதில் சர்தார் படம் மிகவும் த்ரில்லரான படமாகவும் பிரின்ஸ் படம் காதல் காமெடி என்று மசாலா மிக்ஸ் ஆன ஒரு படமாக இருந்தது.
எனவே கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் பொன்னியின் செல்வன் ஆகியவை கமர்ஷியலாக வசூலை வாரிக் கொடுத்தது. அதுபோலவே சிவகார்த்திகேயன் நடித்த டான் டாக்டர் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கும் நல்ல வசூலை தந்தது.
இதனையடுத்து தற்போது வெளிவந்து இருக்கக்கூடிய இவர்களின் இந்த படங்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களாக தான் உள்ளது.
எனினும் சர்தார் படமானது பிரின்ஸ் படத்தின் வசூலை விட இரண்டு மடங்கு அதிகமான வசூலை வாரி குவித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதற்குக் காரணம் பிரின்ஸ் படத்திற்கு போதுமான விமர்சனங்கள் இல்லாமல் போனது தான் அதன் வசூலை பாதித்திருக்கிறது என்கிறார்கள்.
மேலும் பிரின்ஸ் படத்தை பார்த்துவிட்டு யூடியூப்பில் விமர்சனம் செய்தவர்கள் அதிகளவு நெகட்டிவ் விமர்சனத்தை தந்திருப்பதால் இந்த படத்தை பார்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்துபோய் சர்தார் படத்திற்கு அதிக கூட்டம் சென்றதாக கூறுகிறார்கள்.
ஏற்கனவே திரைக்கு வருவதற்கு முன்பே பிரின்ஸ் படம் வசூலை எடுத்துவிட்டது.இந்த நிலையில் கார்த்தி நடித்த இந்த படம் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஏக குஷியில் இருக்கிறார்கள்.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரக்கூடிய முதல் படம் இது தான் என்றாலும் இது அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது என்னமோ உண்மைதான்.
இதற்கு முன்பே கார்த்தி நடித்த படங்களான அழகுராஜா, காஷ்மோரா போன்றவை தீபாவளிக்கு வெளிவந்து தோல்வியை தழுவிய போதிலும் இந்த படம் தற்போது தீபாவளிக்கு வெளிவந்து வெற்றியை தந்துள்ளது மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
இதனை அடுத்து சர்தார் பட குழுவினர் நேற்று சக்சஸ் மீட்டை அறிவித்து மிகச்சிறப்பாக அதை செயல்படுத்தினர். இது வரை பிரின்ஸ் படக்குழுவினர் வசூல் பற்றியும் மற்ற விசயங்கள் பற்றியும் ஏதும் கூறவில்லை.