இரண்டாவது மனைவியை 7 மாதத்தில் பிரிந்த பப்லூ பிரித்விராஜ்…! – இது தான் காரணமாம்..!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் பப்லு ப்ரித்விராஜ் ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அதன் பிறகு நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் 1990 களிலிருந்து சீரியலில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் இவருக்கு கிடைத்தார்கள். மேலும் இவர் அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலை செய்திருக்கிறார்.

சீரியல்களை பொறுத்தவரை ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தவர். நடிப்பதோடு நின்று விடாமல் இவர் ஜெயா டிவியில் சவால் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதனை அடுத்து ராதிகாவின் தயாரிப்பில் வெளி வந்த அரசி சீரியலில் திருநங்கை ரவுடியாக நடித்து அசத்தினார்.

1994 ஆம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ஆட்டிசம் உள்ள ஆண் குழந்தை பிறந்தது. எனினும் இவர்களது மன வாழ்க்கை நீடிக்கவில்லை. கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாக பிரிந்து வாழ்ந்தார்கள்.

இதனை அடுத்து நடிகர் பப்லு ப்ரித்விராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 23 வயதான ஷீத்தல் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதனை அடுத்து நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம் என்று கூறினார். கிட்டத்தட்ட இவருக்கும் அந்த பெண்ணிற்கும் 30 வயதிற்கு மேல் வித்தியாசம் உள்ளது.

எனினும் யார் என்ன சொன்னாலும் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் ஷீல்தலை கப் கேக் என்று கொஞ்சுவதும், வானத்தில் ப்ரபோஸ் செய்வது போல உள்ள வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு பலரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இந்த சூழ்நிலைகள் தற்போது ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்விராஜோடு எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முழுவதுமாக நீக்கிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

அந்த கமெண்டுக்கு லைக் போட்டு சந்தேகத்தை ஷீத்தல் அதிகப்படுத்தி விட்டார். எனவே இவர்களுக்கு இடையே உள்ள உறவு தொடர்கிறதா? அல்லது பிரிந்து விட்டதா? என்பதை இருவரில் எவரேனும் ஒருவர் பதில் அளித்தால் மட்டுமே உண்மை நிலை என்ன என்பதை தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam