குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.

தற்சமயம் மலையாள சினிமாதான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் சினிமாவாக மாறி இருக்கிறது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி வெளியிட்ட அறிக்கைதான் தற்சமயம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூற வேண்டும்.

உண்மையில் இதே மாதிரியான கமிட்டி எல்லா சினிமாவிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருந்து வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முதல் கட்ட முயற்சியை எடுத்தது கேரளா அரசு.

கேரளா பிரச்சனை:

அந்த வகையில்  ஹேமா கமிட்டி என்கிற ஒரு குழுவை அமைத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு கூறினார்கள். அதனை தொடர்ந்து நிறைய நடிகைகளையும் சந்தித்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பாலியல் தொடர்பாக நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து விவரங்களை பெற துவங்கினார்கள்.

தற்சமயம் அந்த அறிக்கை முழுமை பெற்றுள்ள நிலையில் இதில் பல முக்கிய புள்ளிகள் மாட்ட உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகர்கள் பலரது பெயரும் இதில் அடிபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரித்விராஜ் இந்த விஷயம் குறித்து தற்சமயம் வாய் திறந்து இருக்கிறார்.

தண்டனை கடுமையா இருக்கணும்

மலையாள பிரபலங்கள் பலரே இதற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் பிரித்திவிராஜ். அதில் அவர் கூறும் பொழுது ஹேமா கமிட்டி விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

அதேபோல நடிகர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர்களிடம் இவர் பேசும்பொழுது ஹேமா கமிட்டி அறிக்கை எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்

ஏனெனில் ஹேமா கமிட்டி ஆரம்பித்தபோதே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவர் என்று கூறியிருக்கிறார் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட சட்டம் அனுமதிக்காது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை மட்டும்தான் அரசு வெளியிட வேண்டும் என்றும் பிரித்விராஜ் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபலங்கள் பலருமே ஹேமா கமிட்டி விவகாரத்தில் சிக்கி இருக்கும் நிலையில்  பிரித்விராஜ் ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக பேசி இருப்பது மலையாள சினிமாவில் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version