வீட்டு லோன் EMI கட்ட காசு இல்ல.. அதனால அந்த படத்துல நடிச்சேன்.. பிரியா ஆனந்த் ஓப்பன் டாக்..!

தென்னிந்தியா வட இந்தியா என்று இரண்டிலுமே பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மாதிரியான பல படங்களில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என்று நான்கு மொழிகளிலும் ஓரளவுக்கு இவருக்கு வரவேற்பு என்பதை இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் பிரியா ஆனந்தின் ஆசையாக இருந்தது.

இயக்குனராக ஆசை:

ஆனால் இயக்குனராக இருப்பதை விடவும் பிறகு கதாநாயகியாக இருப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். பூர்வீகம் என்று பார்க்கப் போனால் சென்னையை சேர்ந்தவர்தான் நடிகை பிரியா ஆனந்த்.

ஆனால் பார்ப்பதற்கு அவர் வட இந்திய நடிகை போல இருப்பார். தமிழில் முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் நடிகர் ஜெய் நடித்த வாமனன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே குறை இல்லாத அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பிரியா ஆனந்த்.

அதற்கு பிறகு லீடர், 180 மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் பிரியா ஆனந்த் நடித்து வந்தார். இந்த நிலையில் ஹிந்தியில் நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் பிரியா ஆனந்த்.

தொடர்ந்து வாய்ப்புகள்:

ஹிந்தியில் மேலும் இரண்டு திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் நடிகர் சிவா நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் பிரியா ஆனந்த். அதற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கியது.

இரும்பு திரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பிரியா ஆனந்த். சமீபத்தில் லியோ திரைப்படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்தகன் படத்தின் விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர் காசுக்காக வேறு ஏதாவது வேலை பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பிரியா ஆனந்த், சினிமாவை விட அதிக காசு வேறு எங்கு தருகிறார்கள். காசுக்காகதான் முதன்முதலாக சினிமாவிலேயே ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் வீட்டுக்கு வாங்கிய கடனை கட்டுவதற்கு கூட காசு இல்லை. அதை கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

அதனாலேயே படத்தின் கதை என்னவென்று கூட கேட்காமல் அந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார் பிரியா ஆனந்த்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version