வொர்க் அவுட் சொல்லி கொடுத்த நடிகர்… மோசமான கேள்வி எழுப்பிய நபருக்கு பிரியா ஆனந்த் பதில்..!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் வாமனன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை பிரியா ஆனந்த்:

தற்போது 37 வயதாகும் நடிகை பிரியா ஆனந்த் பார்ப்பதற்கு இன்னும் எளிமையான தோற்றத்தில் அதே அழகோடு வலம் வந்து கொண்டிருப்பது தான் இவரது தனி ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

இவர் இங்கிலீஷ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

கடைசியாக நடிகை பிரியா ஆனந்த் தற்போது சமீபத்தில் வெளிவந்திருக்கும் அந்தகன் திரைப்படத்தில் பிரஷாந்திற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி எல்லோரது நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாத்துக்கு இந்த படம் மாபெரும் பெயரையும் புகழையும் தேடி கொடுத்திருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

அவரால் இடுப்பு வலி வந்துடுச்சு:

இப்படியான நேரத்தில் நடிகர் பிரியா ஆனந்த் பட குழுவினரோடு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பிரியா ஆனந்த் மிகவும் அசைவுகர்யமாக உணர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பலரும் அந்த பத்திரிகையாளரை விளாசி வருகிறார்கள்.

அதாவது பெசன்ட் ரவி இரண்டு நாட்களுக்கு முன் ஜிம் ஒர்க்கவுட் சொல்லி கொடுத்தாரு அவர் சொல்லிக் கொடுத்ததுல என்னுடைய இடுப்பு இப்ப வரைக்கும் வலிக்குது என நடிகை பிரியா ஆனந்த் மிகவும் சாதாரணமா ஒரு விஷயத்தை பேசினாங்க .

அதை கேட்ட பத்திரிக்கையாளர்…பிரியா ஆனந்துக்கு இடுப்பு வலி எடுத்ததை போல் பிரசாந்த் சார் உங்களுக்கு ஏதாவது இடுப்பு வலி வந்ததா?என ஏடாகூடமாக கேள்வி கேட்டார்.

இதைக் கேட்டதும் சற்றுமுகம் சுளித்துப் போன பிரியா ஆனந்த் இது மாதிரியான சமயத்தில்தான் ஏன் நான் தமிழ் கத்துக்கிட்டன்? ஏன் தான் தமிழ் தெரிஞ்சதோ என்ற தோன்றுகிறது என பிரியா ஆனந்த் புலம்பினார்.

மோசமான கேள்விக்கு பிரியா ஆனந்த் அப்செட்:

இதை கேட்ட தியாகராஜன் உடனடியாக… பொம்பளைங்க உடற்பயிற்சி செய்யும் போது இடுப்பு வலி வரும்.

ஆனால், ஆண்கள் செய்தால் வராது உடல் வலி தான் ஏற்படுமே தவிர வேறு எந்த வலியும் இருக்காது என பதில் கூறினார்.

உடனே பெசன்ட் ரவி அந்த பத்திரிக்கையாளரை பார்த்து நீங்களும் வாங்க ஜிம் வொர்க் அவுட் செய்யலாம் எந்த நேரத்தில் எந்த கேள்வியை கேக்குறீங்க? என்று சரியான பதிலடி கொடுத்தார்.

பல பேர் இருக்கும் ஒரு பொது மேடையில் நடிகைகளுக்கு பத்திரிகையாளரால் இது போன்ற கேள்விகளால் மிகுந்த அவமானம்…அசவுரியம் ஏற்படுவதை நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளியிருக்கிறார்கள்.

நடிகை பிரியா ஆனந்த் ஒரு கட்டத்தில் முகம் சுளித்தும் கூட விடாத அந்த பத்திரிகையாளரை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version