தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர இயக்குனரான அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார்.
அதன் பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இவர் உதவி இயக்குனராக சங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் ஆன நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் .
இயக்குனர் அட்லீ:
2013 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான ராஜா ராணி படத்தை இயக்கி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை குவித்தார்.
இத்திரைப்படத்தின் மூலம் அட்லீ யார் என்று என தமிழ் சினிமா ரசிகர்கள் தேடத் துவங்கினார்கள் முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கினார் அட்லீ.
தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து தளபதியை வைத்து தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராகப் புகழ்பெற்றார்.
முன்னதாக இவர் குறும்படங்களை இயக்கி அதன் மூலம் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த வெற்றித்திரைப்படங்கள்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இவர் இயக்கியிருந்தார். இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அட்லீயின் மனைவியான பிரியா.
அதன் மூலம்தான் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இப்படியாக தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக இயக்கி வந்த அட்லீக்கு பாலிவுட் நட்சத்திர ஹீரோவான ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஜவான் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூலை முறியடித்து இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி படைத்தது .
ஷாருக்கான் தொடர்ச்சியாக பல தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் அட்லி தான் மீண்டும் அவருக்கு மாபெரும் வெற்றி கொடுத்து நிலைநாட்டில் இருக்கிறார்.
ஜவான் வெற்றி:
ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திருப்பி பார்க்க வைத்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து விட்டார் அட்லீ .
இதையடுத்து பாலிவுட் சினிமாவிலும் தனக்கான வெற்றியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். இதுவரை அவர் இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும் அது அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி திரைப்படங்களாகும்.
அதிக வசூலிட்டி சாதனை படைத்த படங்களாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் அட்லீ மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்து தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலி ஆன பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தார். மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அட்லீ குடும்பத்தினர் அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக் கொள்ளும் க்யூட்டான போட்டோக்கள் மற்றும் அவுட்டிங் செல்லும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
குழந்தை பிறந்தும் குறையாத கவர்ச்சி:
இந்த நிலையில் தற்போது பிரியா அட்லீ திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் கூட கிளாமர் குறையாமல் அதே கவர்ச்சி அழகாக வெளிக்காட்டி அவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்தும் கிளாமர் கொஞ்சம் கூட குறையலையே என அவரது கவர்ச்சி நடிகை ரசித்து வர்ணித்து தள்ளியுள்ளனர் இதோ அந்த புகைப்படங்கள்.