நானும் தப்பான படங்களில் நடிச்சிருக்கேன்.. ஓப்பனாக கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருந்தாலும் கை நிறைய படவாய்ப்புகள் வைத்துக்கொண்டு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்பு இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு வேலைகளை லைகா நிறுவனம் முடுக்கி விடும் என்று தெரிகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் நானும் தப்பான படங்களில் நடித்துள்ளேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

சின்னத்திரையில் சிறிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இப்படத்தில் நடிக்கிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் மேயாத மான் நடித்த திரைப்படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர். இவருக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஆரம்பத்தில் தப்பான படங்களில் நடித்துள்ளேன்.

எந்த சினிமா பின்புலமும் இல்லாத காரணத்தினால் எப்படி கதை தேர்வு செய்யவேண்டும் என்று எதுவும் தெரியாமல் தப்பான படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்கள் ரிலீசாகியும் விட்டது என மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அப்படி என்ன படத்தில் ஒரு தப்பான படத்தில் நடித்தார் என்று ரசிகர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …