ஒரு சின்னத்திரை நடிகை இந்த அளவுக்கு உயர முடியுமா.? என்ற கேள்விக்கு விடையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவனி சங்கர் தொடர்ந்து சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இவருக்கு பெருவாரியான ரசிகர் பட்டாளம் உருவானது. இதன் பயனாக இவருக்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரியா பவானி சங்கர் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை கேமராக்களின் முன்பு கொண்டு வந்து தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
மினிமம் கேரண்டி என்ற அந்தஸ்தை பிரியா பவானி சங்கர் கொடுக்க முடியும் என்று நம்புகின்றனர். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்யும் பிரியா பவானி சங்கருக்கு இவருடைய அழகும் நடிப்பும் சினிமாவில் உச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
தொடர்ந்து சினிமாவில் பயணித்து வரும் இவர் தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார் ராசியான நடிகை என்ற பெயர் எடுத்துள்ள பிரியா பவானி சங்கர் ஐ தங்களது படத்தில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
ஆனால் எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே சம்மதம் தெரிவித்து நடிக்க ஒப்புக் கொள்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இணையத்தில் தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடாமல் கலர்கலரான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அவற்றை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சிலவற்றை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பொம்மை என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.