காலேஜ் படிக்கும் போது தான் எனக்கு முதன் முதலில் இது வந்துச்சு… பிரியா பவானி ஷங்கர் பேச்சு..

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்த போதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

சீரியலின் மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆம், ‘மேயாத மான்’ படத்தில் முதல்முதலாக கதாநாயகி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் பிரிய பவானி சங்கர்.

அதன் வெற்றி அவருக்கு மேலும் பல படவாய்ப்புகள் கொடுக்க கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். சீரியல் நடிகையாக இருந்து ஹீரோயின் ஆனவர் என்ற அதிர்ஷடத்தை பெற்றவர் பிரியா பவானி ஷங்கர். ஆம், எத்தனையோ பெரிய நடிகைகள் ஒரு சில படத்தில் மட்டும் நடித்துவிட்டு ஆளே அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு.

ஆனால், பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகை என்ற உச்சத்தை தொட்டிருக்கிறார். இதற்கிடையில் நடிகையாக ஆவதற்கு முன்பே ராஜவேல் என்பவரை காதலித்து வந்த பிரியா பவானி தன்னுடைய 18 வயதில் இருந்து காதலித்து வருகிறார்.

முன்னணி நடிகையான பிறகும் ராஜவேல் உடனான காதல் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. கடற்கரையில் தனக்கு பிடித்த மாதிரி புதிய வீடு ஒன்றை வாங்கி அதில் காதலன் ராஜவேலு உடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வாருகிறார். அடிக்கடி தன்னுடைய காதலரோடு வெளியே சென்று அங்கு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்;அந்த நேரத்துல Mood போயிடுது.. நானே நல்லா பண்ணிடுவேன்.. பிரியங்கா மோகன் ஓப்பன் டாக்..

இந்நிலையில் தற்போது தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் ” என்னுடைய முதல் காதல் காலேஜ் படிக்கும்போது தான் ஆரம்பித்தது. அன் கண்டீஷனல் லவ் அவரிடம் தான் முதன்முதலில் நான் பார்த்தேன். அவர் அளவிற்கு நான் காதலிக்கவில்லை.

Priya BhavaniShankar

திரும்ப கொடுக்கவில்லை என்றாலும் கூட அந்த நபரின் காதல் எப்போதும், எந்த நேரத்திலும் மாறாமல் அப்படியே அதே அன்போடு தான் இப்போ வரைக்கும் இருக்கிறது. எங்க அப்பாவுக்கு அடுத்தது ஒரு நபர் என் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றால் அது என் காதலன் தான் என பிரியா பவானி ஷங்கர் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

https://youtube.com/shorts/U8mwlLTOV8U?si=vQGlASGw3vHMMO8P

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version