அந்த ட்ரெஸ்-ல இருக்கும் போட்டோ அனுப்புங்க.. கேட்ட ரசிகரை.. அதிர வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுது சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டம் உருவானது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற மெகா தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக உருவெடுத்தார் பிரியா பவானி ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடிகர் வைபவ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி. சமீபத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் இவர் குறிப்பிடும் செல்லுபடி நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் பிரிய பவனி சங்கர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பொழுது கருப்பு உடையில் இருக்கும் உங்களது புகைப்படம் ஏதாவது இருந்தால் அனுப்புங்கள் என்று கேட்ட ரசிகர்களுக்கு உடனடியாக தன்னுடைய புகைப்படத்தை அனுப்பி அதிர வைத்துள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …