“வாவ்.. அரேபியக்குதிரை..” – சொக்க வைக்கும் அழகில்.. கிறங்கடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலருடன் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே பல சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பிரியா பவானி சங்கர் உச்சகட்டமாக தன் காதலருடன் ஸ்கை டைவிங் செய்யும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்த அனுபவத்தை கொடுத்ததற்கு என்னுடைய காதலருக்கு நன்றியையும் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வரும் பிரியா பவானி ஷங்கர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தன்னுடைய காதலனுடன் விடுமுறையை கொண்டாட வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த பிரியா பவானி சங்கர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்.

தற்போது நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அகிலன், எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பத்து தல என்ற திரைப்படத்திலும் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இயங்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய உடலுக்கு கச்சிதமான ஆடையை அணிந்துகொண்டு அழகு சிலை போல அமர்ந்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …