நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் கோடி கணக்கில் செலவு செய்து கடற்கரையில் ஒரு வீட்டை கட்டி முடித்தார். மிக பிரம்மாண்டமான பங்களாவாக உருவாகியுள்ள இந்த வீட்டில் தன்னுடைய காதலனுடன் குடியேறி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர் இதுகுறித்த அறிவிப்பை அவரை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய காதலனுடன் சேர்ந்து புதிய உணவகம் ஒன்றையும் திறக்கிறார். இந்த தகவலும் சமீபத்தில் அவரையே வெளியிட்டு இருந்தார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படம் இவருக்கு சினிமாவில் அடி எடுத்து வைக்க உதவியது அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் யானை திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
சினிமா வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் மிகச் சரியான முறையில் கையாண்டு வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட தன்னுடைய காதலனுடன் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வருகிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர் என்று தெரிகிறது.
அதன் அடிப்படையில் நானும் என் காதலனும் புதிய வீட்டிற்கு குடி பெயர் இருக்கிறோம் என்று தகவலை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து புதிய உணவகம் ஒன்றையும் திறக்க திட்டமிட்டுள்ளார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் பிரியா பவானி ஷங்கர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.