என்ன கொடும சார் இது..? தான் நடித்த படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் நடிகைகள் வளர்ந்து வரும் காலம் வரை இயக்குனர்கள், சக நடிகர்கள், நடிகைகளுக்கு மரியாதை தந்து கண்ணியமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில், சில வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால், அவர்களது ரேஞ்சே மாறி விடுகிறது.

சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் பட்சத்தில், அவர்களின் நடவடிக்கையே வேறு மாதிரி மாறி விடுகிறது. அதற்கு பிறகு மற்றவர்களை கண்டு கொள்ளாமல், இயக்குனர்கள், ஹீரோக்களை அலட்சியப்படுத்துவது சகஜமாக நடந்து வருகிறது.

பிரியா பவானி ஷங்கர்

பிரியா பவானி ஷங்கர் துவக்கத்தில், புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கியவர். அதன் பின்பு நடிகர் வைபவ் ஜோடியாக மேயாத மான் என்ற படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ஓரளவு பிரியா பவானி ஷங்கருக்கு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ருத்ரன், 10 தல உள்ளிட்ட சில படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தார்.

ரத்னம் படத்தில் கதாநாயகி

இப்போது டைரக்டர் ஹரி இயக்கத்தில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ரத்னம் படத்தில், கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 26ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில், தொடர்ந்து டைரக்டர் ஹரியும் நடிகர் விஷாலும் பங்கேற்று படம் குறித்து பேசி மக்கள் மத்தியில் படத்தை அப்டேட் செய்து வருகின்றனர்.

பிரமோ நிகழ்ச்சிகளில்…

ஆனால் கடந்த வாரத்தில் நடந்த பிரஸ்மீட்டிலும் படத்தின் கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் பங்கேற்கவில்லை. யூடியூப் சேனல்கள் எதிலும் அவர் கலந்து கொண்டு, ரத்னம் படம் குறித்து பேசவில்லை.

அதேபோல் அவரது சமூக வலைதள பக்கங்களிலும் ரத்னம் படம் குறித்து எந்த பதிவையும் அவர் செய்யவில்லை. படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியான போதும், அதுபற்றி எதுவும் அவர் கண்டு கொள்ளவில்லை.

கடந்த மார்ச் 29ஆம் தேதி ரத்னம் படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாவது குறித்து மட்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிரியா பவானி ஷங்கர்.

மேயாத மான்

இவர் முதலில் நடித்து அறிமுகமான மேயாத மான் படத்தை தயாரித்தது ஸ்டோன் பென்ச் நிறுவனம்தான், இந்த ரத்னம் படத்தையும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவை தவிர்க்கிறாரா?

ரத்னம் படக் குழுவை பிரியா பவானி ஷங்கர் தவிர்க்கிறாரா அல்லது படக்குழு இவரை தவிர்க்கிறதா என்று தெரியவில்லை. எனினும் இதற்குப் பின்னணியில் ஏதோ விவகாரம் இருப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

என்ன கொடும சார் இது, அவர் நடித்த படத்தை அவரே புறக்கணிக்கிறாரே என்று பிரியா பவானி ஷங்கரை ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version