ஹாரர் திரைப்படங்களுக்கு என்று ஒரு காலம் இருந்த காலகட்டங்களில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக இருந்த படம் டிமான்டி காலனி. டிமான்டி காலனி திரைப்படத்தைப் பொறுத்தவரை நெகட்டிவ் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு பேய் திரைப்படம் என்றாலும் கூட அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்தது.
அப்போது அதிகமாக பேசப்பட்ட படமாக டிமாண்டி காலணி இருந்தது இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை சில வருடங்களாக எடுத்து வந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிரியா பவானி ஷங்கர்
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகையாக பிரியா பவானி ஷங்கர் இருந்து வருகிறார். பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்தியன் 2 திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்தாலும் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யாத காரணத்தினால் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
அந்த சமயத்தில் படத்தை மட்டுமன்றி ப்ரியா பவானிசங்கரையும் நிறைய பேர் விமர்சனம் செய்ய துவங்கினர். ப்ரியா பவானி ஷங்கர் ஒரு ராசியற்ற நடிகை என்றும் அவர் நடிப்பதால்தான் நிறைய திரைப்படங்கள் ஓடுவதில்லை என்றும் அவர்கள் தகவல்களை பரப்பி வந்தனர்.
ரஜினி கமல் நடிச்சா மட்டும்..
இது குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர் சினிமா என்பது ஒரு ஆள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. ரஜினி, கமல் நடித்தால் மட்டும் ஒரு படம் ஓடி விடாது. மேயாத மான் திரைப்படம் ஹிட்டான போது அந்த படம் என்னாலதான் ஓடியது என்று யாரும் சொல்லலை. ஒரு திரைப்படம் உங்களுக்கு பிடிக்கலன்னா அதை விமர்சிக்கலாம்.
ஆனால் ஆயிரம் பேர் வேலை பார்க்கிற ஒரு திரைப்படத்தில் ஒரு ஆள்தான் அந்த படம் தோல்வி அடைய காரணம் என சொல்றது பிற்போக்குத்தனமான விஷயமாக இருக்கு. என்றார் பிரியா பவானி ஷங்கர்.
அனல் பறக்கும் பேச்சு
இதற்கு முன்பே இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய பிரியா பவானி ஷங்கர் கூறும் பொழுது சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்களை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது. எல்லோருமே மனுஷங்க தான் உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பேசினால் உங்களுக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ அதே போல தான் நடிகர்களுக்கும் கஷ்டமாக இருக்கும் படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனத்தை வையுங்கள். அது பிரச்சனை இல்லை ஆனால் முகம் தெரியாதவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதீர்கள் என்று அவர் கூறியிருந்தார்.